நூலகம்

வரலாற்று நூல்கள்

1.பரதேசி பீட்டர்-     6MB

பாளையங்கோட்டை இறையடியார் பரதேசி பீட்டர் புனிதர்களின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டுமென்று என்ற முயற்சிக்கு உங்கள் அனைவரின் செபமே பிரதானம். அவரது வரலாற்றுப் பெட்டகத்தின் சிறுபகுதி தான் இந்த நூல்.

இறையடியார் பரதேசி பீட்டர் பல்கலைக்கழகத்தில்; M.A,LT பட்டம் பெற்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்க்கை முறையால் அத்தனையும் துறந்து, கையில் விவிலியம் மற்றும் திருவோடோடு வீதிவீதியாகச் சென்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் தன்னை முழுவதுமாக ஒரு திருவோடு, விவிலியம் மற்றும் தனது கழுத்தில் மாட்டியிருந்த ஒரு சிலுவை மட்டும் தான். இந்திய மண்ணில், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் ஒர் அசிசியாகவே உலா வந்தார்.

இறைமதிப்பீட்டில் பிறருக்காக வாழ்ந்த பரதேசி பீட்டர் 1958 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21ஆம் நாள் இறைபாதம் சேர்ந்த பிறகும், பிறருக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. தன்னிடம் யாரெல்லாம் வேண்டுகிறார்களோ, தனது கல்லறையைத் தரிசிக்கிறவர்களுக்கு ஆண்டவரிடம் இரந்து மன்றாடி, அவர்கள் வேண்டுவதைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இறைவனின் புனிதராக இருந்து மக்களை வழிநடத்தி வருகின்ற இறையடியார் பீட்டரை, திருச்சபை அதிகாபூர்வமாக, அருளாளராக, புனிதரான அறிவித்து உயர்த்த வேண்டுமென செபங்களோடு கூடிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

2.பரதர் சரித்திரம்-    75MB

வேர்களைத் தேடும் விழுதுகள். ஆம் தாம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய யாருக்குத் தான் ஆவல் இல்லை. இந்தியாவின் தென்கோடி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து வரும் பரத குல மக்களின் வரலாறு நூல் தான் இது. 1947ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலின் பிரதியின் நகல் தான் இது. இந்நூலின் நகல் பிரதியை எமக்கு அளித்த அருட்தந்தை சேவியர் ராஜன் சே.ச.அவர்களுக்கும், இதைத் தந்து உதவிய அந்த பெரியவர் திரு தம்பையா அவர்களுக்கு எம் நன்றி .

3.இளைய இமயங்கள் 

புனிதர்களின் வரலாறு-      15.3MB

மறைநூல்கள்.

1.திருச்சபையும் பொதுநிலையினரும்.- பேராசிரியர். அ. குழந்தைராஜ்-     18MB

பொதுநிலையினர் ஆண்டு நடைபெற்றபோது நமது கத்தோலிக்க இதழ்களில் (டிவைன் வாய்ஸ், தோழன், சர்வவியாபி, நம்வாழ்வு, திருஇருதயத்தூதன், கத்தோலிக்க சேவை, பிரான்சிஸ்கன் ஒலி, கங்கை தூது) வெளியிட்டிருந்த சில கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக தந்துள்ளார் சிந்தனை செல்வர் பேராசிரியர் அ.குழந்தைராஜ்.

இவர் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர். பல பொறுப்புகளைக் கல்லூரி அளவிலும், தேசிய அளவிலும் வகித்தவர். பல பாட நூல்களை உருவாக்கியவர். மற்றும் அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக் கழக கூட்டமைப்பின் ஆலோசகர்.

2.வாழும் விவிலியமாக- அருட்தந்தை ஜெரி சே.ச.    7MB

விவலியம் நம் வாழ்வின் வழியாகவும், ஒளியாகவும் அருக்கின்றது. அத்தகைய சிறப்புக் கொண்ட விவிலியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் விளக்கங்கள் பல தரலாம். தரப்படும் விளக்கமானது தரமானதாக இருக்கவேண்டும், தனிப்பட்டவரது வாழ்வை மட்டுமல்லாது, தரணியில் வாழும் அனைத்து மக்களின் ஒட்டு மொத்தமான நல்வாழ்விற்கும், நிறை வரலாற்றுக்கும் உத்வேகமாக விவிலிய விளக்கங்கள் அமைய வேண்டும். இதனை மனதில் கொண்டே, இந்நூலை உருவாக்கியுள்ளார் தந்தை ஜெரி. சாத்தியமான பல்வேறு விவலிய பொருள்கோள் முறையினைக் கோடீட்டுக் காட்டியுள்ளார். அதன்படி, விவிலியத்தை வாழ வைப்போம்: விவிலயத்தை வாழ்வோம்! விவலியமாகவும் வாழ்வோம்!

அருட்தந்தை ஜெரி தமிழக இயேசு சபைப் பணியாளர் அரசியல் - இறையியலில் முனைவர். 45 மேற்பட்ட கல்வி மனைகளில் பகுதி நேர பேராசிரியர். மேலும் வழக்கறிஞர். 15 ஆண்டுகள் தலித் மக்களுடன் அனுபவசாலி. 54 நூல்களுக்கு சொந்தக்காரர்.

3. புனித சீயன்னா கத்தரீன் .     31MB   

இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் புனிதராக வாழ அழைக்கப்பட்டவரே. புனிதராக வாழும் வாழ்க்கைக்குப் பல எடுத்துக்காட்டுகளைத் தாய்த் திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கை வரலாறு, இறைவார்த்தை அடிப்படையில் வாழ்வதற்காக நம்மை அழைக்கிறது. இளைஞர்களின் ஆண்டு தன்னுடைய இளமைப் பருவத்திலேயே திருச்சபையின் ஒற்றுமைக்காகவும் பிறரன்புப் பணிக்காகவும் வாழ்ந்து மரித்த இத்தாலி நாட்டின் பாதுகாவலர் புனித சீயன்னா கத்தரீன் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பல்வேறு கோணங்களில் இந்த சிறு நூல் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்நூலின் ஆசிரியர்கள் அருள்பணி. இரா.மரிய டெல்லஸ், பேராசிரியர் அ. குழந்தைராஜ் காரைக்குடி