அருள்வாக்கு இன்று

மே 23-வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 9:41-50

இன்றைய புனிதர்


புனித திருமுழுக்கு யோவான் தி ரோசி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள். மாற்கு 9:50

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வுநாளில் அடுத்தவர்களைப் பாவத்தில் வாழத்தூண்டுவோரை வன்மையாகக் கண்டிக்கிறார். தானும் அழிந்து அடுத்தவரையும் பாவசூழலுக்கு உட்படுத்துகிறவர்களை ஒர் எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவதற்குச் சமம் என்ற சாடுகின்றார். இத்தகையோர் இருகால்கள் - கைகள் - கொண்டு நரகத்தில் விழுதைக் காட்டிலும் செய்தக் குற்றறத்திற்காக இரு காலையும் - கையையும் ஏன் கண்களையும் இழந்து நிலைவாழ்வில் நுழைவது மேல் என்று குற்றம் செய்யத்தூண்டும் நபர்களைப் பார்த்துச் சாடுகின்றார். எனவே நாமும் பாவம் செய்வதைத் தவிர்த்து அடுத்தவரையும் பாவத்தில் விழாதபடி காத்தருள இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்பதைப் புரிந்து வாழ்வோம்.

சுயஆய்வு

  1. பிறர் பாவம் செய்வதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறேனா?
  2. இறைவாக்கின்படி வாழ என்னைத் தயார்படுத்தியுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, நான் அனைத்து நிலையினரோடும் உப்பின் தன்மை கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு