இளையோர் ஆண்டு - சிறு பரிந்துரைகள்
நண்பா...
ஜுன் 2010முதல் ஜுன் 2011 வரை நமது திருச்சபை இளையோர் ஆண்டாக அறிவித்திருப்பதை நினைத்து பெரு மகிழ்ச்சியடைகின்றேன்! நீரே இந்த பரந்த உலகின் விடியவாக திகழ போகின்ற பொன், வைரம் போன்ற நவரத்தினங்கள் என்பதை மறவாதீர்கள். எனவே உம்மை உற்சாகப்படுத்த எனது சிறு பரிந்துரைகள்.....

நண்பா ..
இந்த நொடி பொழுதே முக்கியம்! நண்பா நம் மனம் என்றும் அமைதியானது! ஆனால் இந்த நொடி பொழுதை எவ்வாறு வாழ்ந்து வருகின்றாய்? என்பதை பொறுத்து தான் அமைகின்றது மனித வாழ்க்கை.
தோழா!
நேற்று நடந்தது- நாளை நடக்க போவது நினைத்து குழம்பி நிற்காதே! காரணம் நிகழ்காலத்தை உணர முடியாமல் தவிக்கின்றோய்! வாழும் இந்த நொடிபொழுதே மிகமிக முக்கியம் என்பதை மறவாதே! மாறாக- நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவனி! கடந்த போனதை நினைத்து எதிர்காலத்தை நினைத்து குழம்பி ஒரு மனநோயாளியாக மாறும் நிலை அதிகம்.
எனவே தோழா,
கடந்த கால பிரச்சனைகள் எதிர்கால கவலைகள் நிகழ்காலத்தில் அதிகாரம் செலுத்தாவண்ணம் கவனத்தோடு செயல் படு. காரணம் கடந்தவை, எதிர் கொள்பவை நமது நம்பிக்கையை குலைக்கும் ஆயதம்! சோர்வு, ஏமாற்றம், கவலை போன்றவை தோன்றி உம்மை அச்சுறுத்தும்!
நண்பா இன்றைய பொழுதை விட நாளைய பொழுது நன்றாக அமைந்திட நீயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். காலம் முழுவதும் திட்டங்களை தீட்டி கொண்டே போனால் நமது பிள்ளைகளும் வளர்ந்து விடுவார்கள். நெருங்கியவர்களும் விலகிவிடுவார்கள்.
வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நிகழ்காலத்திலேயே கணித்தல் அவசியம். உன் கையிலுள்ள நொடிபொழுதே உனது கட்டுபாட்டுக்குள் உள்ளது என்பதை அறிந்து கொள்!
எதிர்காலம், பணம், அச்சம், நோய் இவை எல்லாம் உனை படைத்த இறைவன் கையில் ஒப்படைத்து விடு! உன் கையிருக்கும் கணபொழுதை எப்படி அறுவடை செய்வாய் என்பதை நினைவில் கொள். நாளைபொழுதை இறைவன்பால் வைத்துவிடு.
நண்பா!
உன் கரங்களில் தவழும் நொடிபொழுது
இனியபொழுதாக அமைந்திட எம் வாழ்த்துக்கள் !
நலமுடன் நாளும் வளர்ந்திட வாழ்ந்திட நொடிபொழுதின் ஆசீர் !!