உன் இலட்சியப் பாதையை நோக்கி..

திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.

new way to led
நண்பா!
ஒன் மினிட் ப்ளீஸ்
கடந்த ஆண்டின் பயணம் வீணாகவில்லை.
நீ போகும் பாதையும் முடியவில்லை .
ஆனால் நீ களைத்து போயிருக்கலாம்.
உன் கண்கள் சோர்ந்து போயிருக்கலாம்.
உன் கைகள் விரைத்துப் போயிருக்கலாம்.
உன் இதயம் இறுகி போயிருக்கலாம். -
இருப்பினும் ஒரு நிமிடம்
உனக்காக பிறந்திருக்கும் இப்புத்தாண்டில்
இறைவனோடு வெற்றிநடை போட புறப்படு தோழா!
உருகாத மெமுகு ஒளிதருமோ?
அசையாத இராட்டை நூல் தருமோ?
உடையாத முட்டை உயிர் தருமோ?
உழைக்காத தேனீ தேன் தருமோ?
கரையாத மேகம் மழை தருமோ?
மடியாத விதை செடி தருமோ?
அதிராத யாழ் இசை தருமோ?
ஈகை வழங்காமல் வள்ளல் தோன்றுவானோ?
எனவே
உழைக்காமல் நீ உயர்ந்திடுவாயோ?
மனிதனாக பிறந்தது இறைவனாக இருப்பினும்
உழைப்பே உயர்வு என சுட்டி காட்டியவர் இயேசு!
தோழா!
உனக்காக மலர்ந்திடும் புத்தாண்டில்
இறையுணர்வில் ஆற்றல் பெற்ற
இகமதை வென்றிடுவாய்!
தடைக்கற்களை படிக்கற்களாக்கி
உன் வாழ்க்கை பாதையை வளமாக்க புறப்படு!
தோழா!
வாழ்க்கை என்பது நிரந்தரம் அல்ல
ஆனால்
வாழ்வில் இலட்சியமும் குறிக்கோளும் நிரந்தரமே! நிஜமே!
நீ ஒரு புது பிறப்பாக மாற வேண்டுமானல் உன் வாழ்வை சீர் குலைக்கும்
நாகரீக சுமைகளை - தடைகளை பாடையிலேற்றி விடு!
உன பரமனின் பிறப்பாய் வாழ அவரில் தஞ்சம் புகுந்துவிடு!

உன் கடந்த காலம் இயேசுவின் மார்பில் உறங்கட்டும்!
சரிகட்ட முடியாதவற்றை அவரில் புதைத்துவிடு!
புத்தாண்டில் புது யுகம் படைத்திட
வீரத்தோடும்- விறுவிறுப்போடும்
உன் இலட்சிய பாதையை நோக்கி பணயி!
உன் பயணத்தில் மழலை மன்னவனும்
பயணிக்கின்றார் என்பதை உன்
அனுதின செபத்தால் நிறைவு செய்....

புறப்படு நண்பா!
நல்முத்துக்களை நின் கரங்கள் குவிக்கும் என்றும் உன் வளர்ச்சி பாதையில்..........