கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

இதயத்திலிருந்து.....


    விண்ணில் வாழ்ந்த இறைமகனே
	    விண்ணவர் போற்றும் தூயவனே
	  என்னில் நீவிர் வாழ்ந்திடவே
	    இன்னிசையாலே அழைக்கின்றேன்
	  
	  உலகக் கவலையில் நான் மூழ்கி
	    உம்மை மறந்து அலைந்தேனே
	  உள்ளம் எழுந்து வந்தருள்வீர்
	   உண்மை இன்பம் அளித்திடுவீர்	  
    

நற்செய்தி

Merry Xmas

அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

மத்தேயு 2:9-11


அன்புடன் வாழ்த்து மடல்


இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!
உன்னத தேவனே! என் இயேசு ராஜானே!! உம்மை நாங்கள் ஆராதிக்கின்றோம். உமது பிறப்பு கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வந்தது. அதற்காக வானத்தூதர்களோடு சேர்ந்து இறைவா உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உம்மை போற்றுகிறோம்

child at winterஉமது பிறப்பால் மண்ணக மாந்தர்கள் அனைவரும் அமைதியையும், மகிழ்ச்சியையும், இறைவனது அன்பையும் பெற்றுக் கொண்டார்கள். அதற்காக உம்மைத் துதிக்கின்றோம்.

வானதூதர் அறிவித்த நற்செய்தி கேட்டு புத்துயிர் பெற்று உம்மைக் காண தேடி வந்த இடையர்களைப் போல் நல்மனம் கொண்டவராய் உம்மை நோக்கி விரைந்திட அருள்ரபுரியும். உமது பெயரால் மன்றாடும் போது தந்தையின் மகிமைக்காக, குறைகள் காணப்படும் எங்கள் வாழ்க்கையை நிறைவான வளமான வாழ்வாக மாற்றுவீராக.

எங்களை நலமாக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள பூமியில் மனிதனாய் பிறந்த இயேசுவின் நாமத்திலே உம்மை மன்றாடுகிறோம் தந்தையே! உமது கிருபை எங்களோடு தங்கட்டும். ஆமென்.

அன்பின்மடல் 13 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மடலைப் பார்வையிடும் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பு மலரை அலங்கரித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் மற்றும்எம் இணைய பார்வையாளர்களான உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பல உரித்தாகுக!!!உங்கள் கருத்துக்களை கீழ் காணும் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்
நவராஜன்