வாழ்த்துக் கவிதை
அமைதித் தேடும் மனிதனுக்கு
அமைதியை அளித்திட
அன்பைத் தேடும் மனிதனுக்கு
அன்பை அள்ளித் தந்திட
நிம்மதி தேடும் மனிதனுக்கு
நிம்மதி நிறைவாய் நிறைந்திட
சோர்ந்து போன மனிதனுக்கு
சுகமான இறைப்பற்றை தந்திட
வாழ்வைத் தேடும் மனிதனுக்கு
வளமாய் வாழ்வை வழங்கி
கிறிஸ்து பிறந்த இந்நாளிலும்
தொடர்ந்து வரும் புத்தாண்டில்
ஒவ்வொரு நாளும் நிறைவாக
பெற்று மகிழ்ந்திட எம்பெருமான்
இயேசுவை வேண்டிக் கொள்வோம்.
திருமதி. லியோனா இருதயசாமி
பாளையங்கோட்டை
அன்பு பார்வையாளர்களே!
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நன்னாளில் எங்களின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் பல உரித்தாகுக.
8ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு மடல் இது. தொடர்ந்து அன்பின் மடல் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு எமது நன்றிகள் பல.பல...
இம்மலரைச் சிறப்புற செய்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியும், பாராட்டுகளும்...
சிறப்பு மலரைப் பார்வையிட்டு மறக்காமல் உங்கள் மேலான எண்ணங்களை விருந்தினர் பக்கத்தில் பதிவு செய்யவும்.
நம்மை முற்றிலும் அறிந்த இறைமகன் இயேசு பாலன் வரும் நாட்களில் நம் தேவைகள் அனைத்தையும் அவர் சித்தம் போல் நிறைவாய் அளித்திடுவாராக!
கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
