வாருங்கள் ஆராதிப்போம்!
பாலன் இயேசுவை!
வாருங்கள் கொண்டாடுவோம்!
வார்த்தை மனுவானாரே!
விண்ணில் மகிமைப் பொங்கிட
மண்ணில் அமைதி நிலைத்திட
மீட்பர் பிறந்துள்ளார் மாட்டுத்தொழுவில்
மனித நேயம் நம்மில் மலர்ந்திட ..
வானவர் கீதங்கள் முழங்கிட
இடையர்கள் மகிழ்ச்சியில் வியந்திட
நம் பாலன் தவழ்ந்தார் கந்தல் துணியில்
மனித நேயம் நம்மில் வளர்ந்திட ..
வீண்மீன் பாதை காட்டிட
அறிஞர்கள் தேடி வந்திட
நம் அன்பு நேசர் மலர்ந்தார் புல்லணையில்
மனித நேயம் நம்மில் நிலைத்திட ..