merry christmas2003

merry christmas2003

merry xmas
merry xmas
மலைக்குகையொன்று மனம் திறந்தது.
மாபரனே வா என்றது.
வாடிக்கிடந்த, மனித கருணையை தேடிக்கிடந்த
கால்நடைகள் கனவு கண்டன.
கூட்டி வைத்த வைக்கோல்கூட, குழந்தைக்கான மடியானது.

மாடடைக்குடிலில் மனிதனின் பிறப்பு ஏன்? தன்மகவுக்கான பாலை தரணிக்கு தரும் இடம் என்பதாலா?
இருப்பிலும் இறப்பிலும் பயன்படும் என்பதாலா?
மாட்டுக்கழுத்து மணி ஒசை குழந்தையின் அழுகை
ரீங்காரம் என்பதாலா?
மனிதன் ஆயனாக இங்குதான் தொடங்கவேண்டும் என்பதாலா? ஏன் மாடடைக்குடில் இறைவனின் மடியானது?.
merry xmas
next page