bellxmas

எந்தன் மீட்பர்

எந்தன் மீட்பர் பூவியில் வந்த நாளிதே
அவர் வந்த நாளும் இன்ப நாளாய் ஆனதே

1. வார்த்தையான தேவன் அவர் மனுவுருவானார்
ஏழையாக பிறந்து - நம் மீட்பராய் வந்தார்
வானவர் வாழ்த்திட ஆயர்கள் வணங்கிட
தேவா! இறைவா பணிந்தும்மை வணங்கிட
தேவ பாலனே என் இயேசு தெய்வமே

2.சாதிசமய உணர்வுகள் இனி ஒளிந்திட வேண்டும்
மனிதநேயம் மண்ணில் என்றும் மலந்திட வேண்டும்
ஒற்றுமை ஒங்கிட இயேசுவில் இணைந்திட
என்னை உமது கருவியாய் மாற்றிட
தேவ பாலனே என் இயேசு தெய்வமே