இயேசு பிறப்பின் உணர்வலைகள் ஏழு



அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய செய்தியைப் பெற்றவர்களிடம் கீழ்வரும் 7 உணர்வலைகள் ஆசையவாடியதை நாம் காண முடிகிறது.

1.நிகழ்ச்சி 2.காட்சி 3.மகிழ்ச்சி 4.மாட்சி 5.எழுச்சி 6.புகழ்ச்சி 7. சாட்சி.


1.நிகழ்ச்சி:

இயேசுவின் பிறப்பைப் பற்றி விவரிக்கும் புனித மத்தேயு ”இயேசுவின் பிறப்பையொட்டிய ”நிகழ்ச்சிகள்” என்ற வர்ணிக்கத் தொடங்குகிறார்.
நற்செய்தியாளர் யோவான் இம்மாபெரும் நிகழ்ச்சியை ”வாக்கு மனிதர் ஆனார்: நம்மிடையே குடிகொண்டார்” என அதிசயத்தைப் பற்றிக் கூறுகின்றார்.


காட்சிகள்
2. காட்சி:

இயேசு பிறந்ததும் அது மாபெரும் காட்சியாகக் கீழ் வரும் நபர்கள் காண்கிறார்கள். அன்னை மரியாள் இறைமகன் தனது மடியில் தவழ்வதைக் காண்கின்றார். யோசேப்பு, இடையர்கள், மூன்று இராஜாக்கள், சிமியோன், அன்னா போன்றவர்களும் இக்காட்சியைக் கண்டு மகிழ்கின்றனர்.


3. மகிழ்ச்சி:

அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தபொழுது, தன் கருவறையில் இயேசுவைத் தாங்கி வந்தால், எலிசபெத்தின் குழந்தை யோவான் அவள் வயிற்றிலிருந்தே ”மகிழ்ச்சியால் துள்ளியது”. (லூக்கா 1:41)
மரியாவும் போற்றிப் புகழும் பாடலில் ”என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கிறது”(லூக்கா 1:47) என்று மகிழ்ச்சியில் திளைக்கின்றார்.
வானதூதரணி இடையர்களுக்குத் தோன்றி ”அஞ்சாதீர்கள். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன்” என்றது (லூக்கா 2:10)


4.மாட்சி:

லூக்கா நற்செய்தியின்படி ”ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் (இடையர்கள்) வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது” (லூக்கா 2:9)
யோவானும் தனது நற்செய்தியில் மாட்சியைப் பற்றிப் பேசுகிறார். ”அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரேமகன் என்ற நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்”.(யோவான் 1:14)


5: எழுச்சி:

சிமியோன் குழந்தை இயேசுவை கையிலேந்தி, ஆசி கூறி: ”இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் என்றார். (லூக்கா 2:34)


6:புகழ்ச்சி:

இயேசுவைக் கருத்தரித்த மரியா ”என் ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது” என புகழ்ச்சிப் பாடல் பாடுகிறன்றார் (லூக்கா 1:47)
இடையகள் குழந்தை இயேசுவைக் கண்டபின் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.” (லூக்கா 2:20).
84 வயதான அன்னாவும் குழந்தை இயேசுவைக் கண்டபின் ”கடவுளைப் புகழ்ந்து நன்றி கூறிகின்றார். (லூக்கா 2:38)


7 சாட்சி:

இடையர்கள் ”அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்” என்று சான்று பகர்ந்ததை லூக்கா 2:17ல் காணலாம். அதைக் கேட்ட யாவரும் இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
அன்னாவும், குழந்தைஇயேசுவைக் கண்டபின் ”எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றி பேசினார்”(லூக்கா 2:38). இவ்வாறு அவரும் இயேசுவுக்குச் சாட்சியாகத் திகழ்ந்தார்.


திருமுழுக்கு யோவான் ”எனக்குப் பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர், ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார்” என்று இவரைப் பற்றியே சொன்னேன்” என உரத்தக் குரலில் சான்று பகர்ந்தார். (யோவான் 1:15)

நாமனைவரும் இயேசு பிறந்த நிகழ்ச்சியைப் பற்றிக் புகழ்ந்து, அவரது மாட்சிக்குச் சாட்சிகளாய் இருப்போம்!
அனைவருக்கும் எனது மன்றாட்டு கலந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!


அருள்தந்தை தம்புராஜ் சே.ச.