இவர் யார்?

அருட்தந்தை சிலுவைமுத்து ச.ச.
Who is He?

``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' (மாற்.8;26)
“நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் முடியும்?” (எசா.50;9)
“நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்” (திருப்பாடல் 116;1
“ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன” (யாக்.2;14)
எனது வாழ்க்கை தான் நான்.
‘தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்ல’ திருமந்திரம் - திருமூலர்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் - வேட்டைக் காரன் - கண்ணதாசன்
உன்னையே நீ அறிவாய்- சாக்கரட்டீஸ்

ஒரு திருமண வீட்டில் தன்னை மாப்பிள்ளைத் தோழன் என்று கூறிக்கொண்டு பல வேலைகளைச் செய்து மரியாதையும், வேண்டிய பொருளும் அவனுக்குக் கிடைத்தது. மறைந்து போனான். அதுபோல "நான் யார்"? என்று விசாரணை செய்யாத வரை "நான்" என்கிற அகங்காரம் நம்மை அதிகாரம் செய்யும் என விளக்கமளித்துள்ளார்.

ஒருநாள்… விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர். ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம், ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.
Ramanaஅதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.
அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி, ‘பாருங்கள், இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.
வந்தவர்கள், இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.
பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.
அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர். அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.
அதற்கு பகவான், ‘நான்தான் ரமணன்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்தத்துடன். தங்களுக்காக வாழாமல் பிறர்க்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

I am a temporary living being, born in order to attain few goals which are bestowed upon me.
பெயர், படிப்பு, இன்னாரின் மகன்/மகள் என்பவையெல்லாம் வெறும் அடையாளங்களே (merely identifications) என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அப்படியானால், நான் யார்?.
நான் யார்? இந்த கேள்வி ஒருவர் மனதில் எழுந்து விட்டால் , அவர் ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய தகுதி பெற்றுவிட்டார் என அர்த்தமாகும்.

விவிலியத்தில் இயேசுவைக் குறித்து - இவர் யார்?
மத்தேயு-8:27: அங்கருந்தவர்கள் வயந்து காற்றும் கடலும் இவருக்குக் கழ்ப்படிகன்றனவே இவர் யார் ? என்றனர்.
மத்தேயு-21:10: யெருசலேமுக்குள் வந்தபொழுது நகர் முழுவதும் பரபரப்புற்று இவர் யார் ? என்று கேட்டது.
லூக்கா-5:21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என்று எண்ணிக்கொண்டனர்.
லூக்கா-7:49: பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லக்கொண்டார்கள்.
இயேசு தன்னைக் குறித்து யோவான் 13;13-15.
13.நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்படுவது முறையே. நான் போதகர்தான் ஆண்டவர்தான்.
14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவனேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கறீர்கள்.
15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதரி காட்டினேன்.

இயேசு - யார்?

Jesus teaching

இயேசு ஆசிரியர்

 1. அதிகாரத்தோடு கற்பித்த ஆசிரியர்.
  ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார். - மத்தேயு 7.29
 2. அதிகாலையில் பணியைத் தொடங்கிய ஆசிரியர்.
  பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். யோவான் 8:2
 3. ஆதாரத்தோடு கற்பித்த ஆசிரியர்
  இயேசு மறுமொழியாக, "நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது. யோவான் 7:16
 4. கற்பனை வளம் மிக்க ஆசிரியர்
  இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக!" லூக்கா:5:13
 5. கதை சொல்லி கற்றுத் தந்த ஆசிரியர்.
  இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. மத்தேயு 13:34
 6. குணமாக்கிய ஆசிரியர்.
  அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். மத்தேயு 4:23
 7. தந்தையோடு இணைந்திருந்த ஆசிரியர்.
  அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார். யோவான் 3:2
 8. தனிக்கவனம் செலுத்தி விளக்கிய ஆசிரியர்.
  உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார். மாற்கு 4:34
 9. துல்லியமாக விளக்கிய ஆசிரியர்.
  மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். லூக்கா24:27
 10. பரிவுள்ள ஆசிரியர்.
  அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மாற்கு 6:34
 11. பெருமையாகப் பேசப்பட்ட ஆசிரியர்.
  அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். லூக்கா4:15
 12. வியப்பில் ஆழ்த்திய ஆசிரியர்.
  இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். மத்தேயு:7:28