அன்றாட வாழ்வில் புனித இஞ்ஞாசியரின் ஆன்மீகம்

(அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதிய "பத்து வாரங்களில் பரமனோடு பரவசம்" என்ற நூலின் பயிற்சிமுறைகள்)

தியான மறையுரை
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

இரண்டாம் வாரம்

பம்பரம் போல் பரபரப்பாக சுழுலும் வாழ்வில் ஒரமாய் ஒதுங்கி உன்னதர் இயேசுவோடு உரையாடி ஒளிதேடி இறைவாக்கை விளக்காக வாழ்வாக வரவேற்று வளம் பெறுக!

8ஆம் நாள் விண்ணிலிருந்து வந்த ஒரு விநோத செய்தி


அருள்வாக்கு: லூக்கா 1:26-38

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா, 28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் " யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 34 அதற்கு மரியா வானதூதரிடம் "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 35 வானதூதர் அவரிடம். "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழ்ந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்றார். 38 பின்னர் மரியா , "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்

அருள்வேண்டல் :

ஆண்டவரே! மரியாள் நற்செய்தியைக் கேட்டு ஆம்'' என்று சொன்னது போல் நானும் உமது குரலைக் கேட்டு உமது சித்தப்படி 'ஆம்' என்று சொல்லும் வரம் தாரும்.

ஆழ்ந்து தியானித்தல் :

  1. அருள்மிகுப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.
  2. தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்.
  3. நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! உமது சித்ததை அறிந்து, அதை ஏற்று நான் 'ஆம்' என்று சொல்லிச் செயல்பட எனக்கு அருள்தாரும்.

8th day A strange message from the heaven


Word of God Luke 1:26-38

26 In the sixth month the angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, 27 to a virgin engaged to a man whose name was Joseph, of the house of David. The virgin’s name was Mary. 28 And he came to her and said, “Greetings, favored one! The Lord is with you.”[b] 29 But she was much perplexed by his words and pondered what sort of greeting this might be. 30 The angel said to her, “Do not be afraid, Mary, for you have found favor with God. 31 And now, you will conceive in your womb and bear a son, and you will name him Jesus. 32 He will be great, and will be called the Son of the Most High, and the Lord God will give to him the throne of his ancestor David. 33 He will reign over the house of Jacob forever, and of his kingdom there will be no end.” 34 Mary said to the angel, “How can this be, since I am a virgin?”[c] 35 The angel said to her, “The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; therefore the child to be born[d] will be holy; he will be called Son of God. 36 And now, your relative Elizabeth in her old age has also conceived a son; and this is the sixth month for her who was said to be barren. 37 For nothing will be impossible with God.” 38 Then Mary said, “Here am I, the servant of the Lord; let it be with me according to your word.” Then the angel departed from her.

Prayer

Lord! Just as Mary heard the Lord's call and said, "Yes, I will hear your voice and say" Yes "according to your will.

Reflective Meditation

  1. “Greetings, favored one! The Lord is with you.”
  2. “The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you"
  3. “Here am I, the servant of the Lord; let it be with me according to your word.”

Supplication

Lord! Grant me to know your will and accept it and say 'yes'.

9ஆம் நாள் ஆனந்த நடனம்


அருள்வாக்கு : லூக்கா 1: 39-45

அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து. எலிசபெத்தை வாழ்த்தினார். 41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று, 45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ” என்றார்.

அருள்வேண்டல் :

ஆண்டவரே! மரியாளைப் போல் நான் எங்கு சென்றாலும் இயேசு ஆண்டவரைத் தாங்கிச் செல்ல அருள் தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்:

  1. மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்ட பொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
  2. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
  3. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறு பெற்றவர்.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! உமது இரக்கப் பெருக்கத்தை நம்புகிறேன். நீர் என்னைத் தூதுவனாகத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. பிறரோடு உமது மீட்பைப் பகிர்ந்து கொள்ள பற்றுகொண்டிருக்கின்றேன்.

9th day Dance of Joy


Word of God Luke 1:39-45

39 In those days Mary set out and went with haste to a Judean town in the hill country, 40 where she entered the house of Zechariah and greeted Elizabeth. 41 When Elizabeth heard Mary’s greeting, the child leaped in her womb. And Elizabeth was filled with the Holy Spirit 42 and exclaimed with a loud cry, “Blessed are you among women, and blessed is the fruit of your womb. 43 And why has this happened to me, that the mother of my Lord comes to me? 44 For as soon as I heard the sound of your greeting, the child in my womb leaped for joy. 45 And blessed is she who believed that there would be[e] a fulfillment of what was spoken to her by the Lord.”

Prayer

Lord! May I, like Mary, carry the Lord Jesus wherever I go.

Reflective Meditation

  1. When Elizabeth heard Mary’s greeting, the child leaped in her womb. And Elizabeth was filled with the Holy Spirit the mother of my Lord comes to me?
  2. And blessed is she who believed that there would be[e] a fulfillment of what was spoken to her by the Lord.”

Supplication

Lord! I hope for your compassion. Thank you for choosing me as your ambassador. I am eager to share your redemption with others.

10ஆம் நாள் பெந்தகோஸ்தே அனுபவம்


அருள்வாக்கு : திருத்தூதர் பணிகள் 2: 1-18

பெந்தகோஸ்து என்னும் நாள் வந்து போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2 திடீரென்று கொடுங் காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். 5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6 அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். 7 எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8 அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர். 9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும். 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!'' என்றனர். 12 எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். 13 இவர்கள், இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர். 14 அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். 15 நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது. 16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. 17 அவர் மூலம் கடவுள் கூறியது: இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர். 18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்."

அருள்வேண்டல் :

ஆண்டவரே! இன்று என்னுள் ஒரு புதிய பெந்தகோஸ்தே அனுபவத்தைக் கொடுத்தருளும்.

ஆழ்ந்து தியானித்தல் :

  1. கொடுங்காற்று , வீசுவது போன்று ஓர் இறைச்சல் வானத்திலிருந்து உண்டாகி அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
  2. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
  3. கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே.

அன்புடன் உரையாடல் :

ஆண்டவரே! உமது உயிர்தரும் ஆவியை, ஆவியின் கொடைகளை எனக்கு அளித்தளும். திருச்சபையைக் கட்டியெழுப்ப என்னைப் பயன்படுத்தியருளும்

10th Day–The Pentecost Experience


Word of God: Acts of the Apostles 2:1-18

1 When the day of Pentecost had come, they were all together in one place. 2 And suddenly from heaven there came a sound like the rush of a violent wind, and it filled the entire house where they were sitting. 3 Divided tongues, as of fire, appeared among them, and a tongue rested on each of them. 4 All of them were filled with the Holy Spirit and began to speak in other languages, as the Spirit gave them ability. 5 Now there were devout Jews from every nation under heaven living in Jerusalem. 6 And at this sound the crowd gathered and was bewildered, because each one heard them speaking in the native language of each. 7 Amazed and astonished, they asked, "Are not all these who are speaking Galileans? 8 And how is it that we hear, each of us, in our own native language? 9 Parthians, Medes, Elamites, and residents of Mesopotamia, Judea and Cappadocia, Pontus and Asia, 10 Phrygia and Pamphylia, Egypt and the parts of Libya belonging to Cyrene, and visitors from Rome, both Jews and proselytes, 11 Cretans and Arabs—in our own languages we hear them speaking about God's deeds of power." 12 All were amazed and perplexed, saying to one another, "What does this mean?" 13 But others sneered and said, "They are filled with new wine." 14 But Peter, standing with the eleven, raised his voice and addressed them, "Men of Judea and all who live in Jerusalem, let this be known to you, and listen to what I say. 15 Indeed, these are not drunk, as you suppose, for it is only nine o'clock in the morning. 16 No, this is what was spoken through the prophet Joel: 17 "In the last days it will be, God declares, that I will pour out my Spirit upon all flesh, and your sons and your daughters shall prophesy, and your young men shall see visions, and your old men shall dream dreams. 18 Even upon my slaves, both men and women, in those days I will pour out my Spirit; and they shall prophesy.

Prayer:

Lord! Grant a new Pentecost experience in me.

Reflective Meditation:

  1. From heaven there came a sound like the rush of a violent wind, and it filled the entire house where they were sitting..
  2. All of them were filled with the Holy Spirit.
  3. We hear them speaking about God's deeds of power

Supplication:

Lord! Give me the life-giving Spirit and the gifts of the Spirit. Use me to build your church.

11ஆம் நாள் ஆவியாரின் வல்லமை


அருள்வாக்கு : திருத்தூதர் பணிகள் 10:38

கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

அருள்வேண்டல்

ஆண்டவரே! என்னை உமது தூய ஆவியால் முற்றிலும் நிரப்பியருளும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
  2. கடவுள் அவரோடு இருந்தார்.
  3. அனைவரையும் அவர் விடுவித்து. எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! நான் பெற்ற தூய ஆவியின் வல்லமையால் பிறருக்கு விடுதலை அளிக்கும் அன்பின் கருவியாக என்னை வழி நடத்தும்.

11th Day – The Power of the Spirit


Word of God: Acts of the Apostles 10:38

God anointed Jesus of Nazareth with the Holy Spirit and with power; he went about doing good and healing all who were oppressed by the devil, for God was with him..

Prayer:

Lord! Fill me totally with your Holy Spirit.

Reflective Meditation:

  1. Anointed Jesus of Nazareth with the Holy Spirit and with power
  2. God was with him.
  3. He went about doing good and healing all.

Supplication:

Lord! Lead me as an instrument of love so that I may heal others with the power of the Holy Spirit that I received.

12ஆம் நாள் சமாரியாவில் அருள் பொழிவு


அருள்வாக்கு : திருத்தூதர் பணிகள் 8:15-17

15 அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட் கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். 16 ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை . ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். 17 பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள் மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

அருள்வேண்டல்

ஆண்டவரே! நான் மன்றாட்டில் நிலைத்து நின்று தூய ஆவியைப் பெற்றிட அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. சமாரியர் கடவுளின் வார்தையை ஏற்றுக் கொண்டனர்.
  2. தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.
  3. பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள் மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! எனது அயலாருக்காக வேண்டி அவர்களும் தூய ஆவியின் அருள் பொழிவைப் பெற்றிட என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்தும்.

12th Day – Anointment in Samaria


Word of God: Acts of the Apostles 8: 15 - 17

15 The two went down and prayed for them that they might receive the Holy Spirit 16 (for as yet the Spirit had not come[c] upon any of them; they had only been baptized in the name of the Lord Jesus). 17 Then Peter and John[d] laid their hands on them, and they received the Holy Spirit.

Prayer:

Lord! Grant me the grace to remain in prayer and receive the holy spirit.

Reflective Meditation:

  1. Samaria had accepted the word of God.
  2. They prayed that they might receive the Holy Spirit
  3. Peter and John laid their hands on them, and they received the Holy Spirit.

Supplication:

Lord! Use me as an instrument that I may pray for my neighbours and that they may be anointed by the Holy Spirit.

13ஆம் நாள் கொர்னேலியு இல்லத்தில் அருள்பொழிவு


அருள்வாக்கு : திருத்தூதர் பணிகள் 10 : 44 - 48

44 பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர் மீதும் தூய ஆவி இறங்கி வந்தது. 45 பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப்போயினர்; 46 ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். 47 பேதுரு , " நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?" என்று கூறி, 48 இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

அருள்வேண்டல்

ஆண்டவரே! எல்லார் மேலும் உமது ஆவியைப் பொழிவீர் என்ற வாக்கை நான் நம்பிட அருள்புரியும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. பேதுருவின் சொற்களைக் கேட்ட அனைவர் மீதும் தூய ஆவி இறங்கி வந்தது .
  2. அவர்கள் பரவசப் பேச்சுப் பேசி கடவுளைப் போற்றிப் பெருமைப் படுத்தியதைக் கண்டார்கள்.
  3. இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! உமது நிபந்தனையற்ற, அளவு கடந்த அன்பும் அருளும் உலகில் உள்ள எல்லா இனத்தவருக்கும் உரியது என்பதை உணரச் செய்யும்.

13th Day – Anointment at Cornelius’ house


Word of God: Acts of the Apostles 10: 44 - 48

44 While Peter was still speaking, the Holy Spirit fell upon all who heard the word. 45 The circumcised believers who had come with Peter were astounded that the gift of the Holy Spirit had been poured out even on the Gentiles, 46 for they heard them speaking in tongues and extolling God. Then Peter said, 47 “Can anyone withhold the water for baptising these people who have received the Holy Spirit just as we have?” 48 So he ordered them to be baptized in the name of Jesus Christ. Then they invited him to stay for several days.

Prayer:

Lord! Grant me grace to believe your word that you pour your Spirit on all people.

Reflective Meditation:

  1. Holy Spirit fell upon all who heard the word of Peter.
  2. They heard them speaking in tongues and extolling God.
  3. Can anyone withhold the water for baptising these people?.

Supplication:

Lord! Let me realise that your unconditional and boundless love and grace are for all people.

14ஆம் நாள் அந்தியோக்கியாவில் அருள்பொழிவு


அருள்வாக்கு : திருத்தூதர் பணிகள் 11 : 19-26

19 ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு , அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை . 20 அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவ ராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். 21 ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். 22 இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள். 23 அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 24 அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். 25 பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; 26 அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில் தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

அருள்வேண்டல்

ஆண்டவரே! நான் உறுதியான உள்ளத்தோடு உம்மையே சார்ந்திருக்க அருள்தாரும்.

ஆழ்ந்து தியானித்தல்

  1. அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.
  2. கடவுளின் அருள் செயலைக் கண்டு பர்னபா மகிழ்ச்சியடைந்தார்.
  3. பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

அன்புடன் உரையாடல்

ஆண்டவரே! உமது வியத்தகு செயல்களைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்து வாழ என்னை ஊக்குவிப்பீராக!

14th Day – Anointment in Antioch


Word of God: Acts of the Apostles 10: 44 - 48

19 Now those who were scattered because of the persecution that took place over Stephen traveled as far as Phoenicia, Cyprus, and Antioch, and they spoke the word to no one except Jews. 20 But among them were some men of Cyprus and Cyrene who, on coming to Antioch, spoke to the Hellenists also, proclaiming the Lord Jesus. 21 The hand of the Lord was with them, and a great number became believers and turned to the Lord. 22 News of this came to the ears of the church in Jerusalem, and they sent Barnabas to Antioch. 23 When he came and saw the grace of God, he rejoiced, and he exhorted them all to remain faithful to the Lord with steadfast devotion; 24 for he was a good man, full of the Holy Spirit and of faith. And a great many people were brought to the Lord. 25 Then Barnabas went to Tarsus to look for Saul, 26 and when he had found him, he brought him to Antioch. So it was that for an entire year they met with the church and taught a great many people, and it was in Antioch that the disciples were first called “Christians.”

Prayer:

Lord! Grant me grace to remain faithful to you with steadfast devotion.

Reflective Meditation:

  1. They spoke to the Hellenists also, proclaiming the Lord Jesus.
  2. Barnabas saw the grace of God and rejoiced.
  3. Barnabas was full of the Holy Spirit and of faith. And a great many people were brought to the Lord.

Supplication:

Lord! Encourage me to share your amazing deeds with others and rejoice.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பரமனோடு பரவசம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com