வத்திக்கான் வானொலி

திருத்தந்தையின் வானொலி

வத்திக்கான் வானொலி ஒரு கத்தோலிக்க வானெலிச் சேவை. இது திருத்தந்தையின் வானொலி.. இயேசுகிறிஸ்துவின் வாழ்வு போதனைகளுமே இதன் நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை..சர்வதேச சமுதாயத்தால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இவ் வானொலி திருத்தந்தையின் திருப்பணிக்கு உதவும் வகையில் ஒரு தொடர்பு சாதனமாகவும், நற்செய்தி பரப்பு ஊடகமாகவும் விளங்குகின்றது. கிறிஸ்தவச் செய்தியைச் சுதந்திரமாகவும் பற்றுறுதியுடனும் திறம்படவும் அறிவித்து, கத்தோலிக்கத்தின் மையத்தை உலகின் பிற பகுதிகளோடு தொடர்பு கொள்ளச் செய்வதே இதன் முக்கியப் பணியாகும்.

Pope_francies

வத்திக்கான் வானொலி, திருச்சபை மற்றும் மதம் சார்ந்த செய்திகளை வழங்குகின்றது. இத்தகைய செய்திகளைப் பிற தொடர்பு ஊடகங்களில் கேட்க முடியாது. முதலில் இவ் வானொலி, திருத்தந்தையும்,திருப்பீடமும் நடத்தும் நிகழ்ச்சிகளையும் அவர்களின் செயல்பாடுகளையும் அறிவிக்கின்றது. சமயச் சூழலில் அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்களைத் தருவதோடு,மக்கள் அவற்றின் காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து, அவர்கள் விசுவாச ஒளியில் செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.

சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது போதிய தொடர்பு வசதிகளற்ற இடங்களில் வாழ்வோர் தம் ஆன்மீகத் தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் உதவியாக திருவழிபாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. சிறப்பாக, திருத்தந்தையுடன் திருச்சபையின் ஒன்றிப்பை ஆழப்படுத்துவதற்கென அவர் தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. வத்திக்கான் வானொலி பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தாலும், மத நல்லிணக்கத்துடன் ஒத்துழைப்புடனும் மனித சமுதாயம் வாழ உதவியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், திருச்சபையின் நீண்ட காலப் பாரம்பரியத்திற்கு ஒத்திணங்கும் வகையில், கலாச்சாரம், கலை, சிறப்பாக இசை போன்றவைகளிலும் போதுமான கவனம் செலுத்தப்படுகின்றது.

தொடக்க இசை

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் ஒலிக்கும் தொடக்க இசை 1949-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. "CHRISTUS VINCTI CHRISTUS REGNAT CHRISTUS IMPERAT "கிறிஸ்து வெல்கிறர், கிறிஸ்து அரசாள்கிறார், கிறிஸ்து நடத்துகிறர்" என்பது அதன் பொருள். (வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இவ்வார்த்தைகளைத் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் பொறித்து வைத்துள்ளார்.) இவ்விசை ஒலித்த பின்னர் "இயேசு கிறிஸ்துக்குப் புகழ்" (Laudetur Jesus Christus) என்ற இறை வாழ்த்தும் தொடர்ந்து ஒலிக்கும்.

நம் வானொலியின் தனித்துவம்

வானொலியைக் கண்டுப்பிடித்த மார்கோனியே வடிவமைத்த பெருமைக்குரிய வத்திக்கான் வானொலி, உலக வானொலிகளில் மிக அதிகமாக 47 மொழிகளில் ஒலிபரப்பும் சிறப்புடையதாகவும் விளங்குகிறது. ஐந்து ஒலிபரப்பு நிலையக் கோவைகள் மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 28,500 மணி நேரம் (ஒரு வாரத்திற்கு சராசரியாக 480 மணி நேரம்) ஒலிபரப்பு நடைபெறுகிறது. இவ் வானொலியில் நிர்வாக்தினர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பத் துறையினர் என ஏறக்குறைய அறுபது நாடுகளிலிருந்து சுமார் 400பேர் பணியில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் பொதுநிலையினர். எனவே திருத்தந்தையின் இவ்வானொலியை பல்வேறு நாட்டு மக்களைக் கொண்ட ஒரு "மினி" கத்தோலிக்க உலகம் என்று அழைக்கலாம்.

நம் வானொலியில் இந்திய மொழிகள்

Indian group at Vatican radio

மே 1965 வத்திக்கான் வானொலி இந்தியப் பிரிவு உதயமானது. முதலில் இந்தி,தமிழ், மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்து நிமிட இரவு ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. திங்களும் வியாழனும் இந்தியிலும், செவ்வாயும், வெள்ளியும் தமிழிலும், புதனும், சனியும் மலையாளத்திலும், திங்கள் முதல் சனி வரை ஆங்கிலத்திலும் பத்து நிமிட ஒலிபரப்பு இடம் பெற்றது.

1982 இந்த நான்கு மொழிகளும் நடத்தி வந்த இரவு ஒலிபரப்பு காலையில் மறுஒலிபரப்பு செய்யப்பட்டன.
12 மே 1985 மலையாள மொழியில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது.
07 ஜனவரி 1986 இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது. இரவு ஒலிபரப்பு ஆறு நிமிடச் செய்தியாக இருந்தது. இவ்வாண்டு இறுதியில் நான்கு மொழிகளிலும் இரவு ஒலிபரப்பு 10 நிமிடமானது.
25 மார்ச் 1990 இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் 15 நிமிட இரவு தினசரி ஒலிபரப்பு தொடங்கியது. இரவு ஒலிபரப்பு மறுநாள் காலையில் மறுஒலிபரப்பு செய்யப்பட்டன.
23 செப் 1993 இந்நான்கு மொழிகளும் காலை மற்றும் இரவில் தினசரி 20 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கியது. இரவு ஒலிபரப்பு மறுநாள் காலையில் மறுஒலிபரப்பு செய்யப்பட்டது.
24 அக். 1993 இந்தி நிகழ்ச்சியுடன் இணைந்து ஞாயிறு மட்டும் உருது ஒலிபரப்பு ஆரம்பமானது.
30 மார்ச் 2003 உருது மொழி ஞாயிறு மற்றும் புதன் மாலையில் 15 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கியது. இந் நிகழ்ச்சிகள் மறுபடியும் அடுத்தநாள் காலையிலும் ஒலிபரப்பாகின்றன.
26 அக் 2003 ரஷ்யவிலிருந்து இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளின் காலை மறுஒலிபரப்பு தொடங்கியது.

நம் வானொலி பிறந்த கதை

இயேசுவின் நற்செய்தியும் மானிட நட்பும் ஒன்றாகக் கலந்ததன் விளைவே வத்திக்கான் வானொலி. திருந்தை பதினோராம் பத்திநாதர் பணியேற்றதும் தமது செய்தி பாரெங்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வானொலி ஒன்றை வடிவமைக்குமாறு தமது நண்பர் மார்கோனியைக் கேட்டார். அப்போதுதான் வானொலியைக் கண்டுபிடித்திருந்த மார்கோனி, திருத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். 1931-ஆம் ஆண்டு, பெப்ருவரி 12ந் தேதி திருத்தந்தை முன் முழந்தாளிட்டு அவர் கரங்களை முத்தி செய்த பின்னர் ஒலிவாங்கியைப் பிடித்தார்.

Mr.Marconi at Vatican Radio

"இயற்கையின் புதிரான சக்திகளை மனிதன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பெருந்தன்மையுடன் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. திருந்தையின் குரல் உலகெங்கும் கேட்க வழி செய்தது." என்று பேசினார். பின்னர் திருத்தந்தையின் பக்கம் திரும்பி,"திருத்தந்தையே, தாங்கள் என்னிடம் ஒப்படைத்த பணியை இன்று உம்மிடமே திருப்பி அளிக்கின்றேன். தங்களது செய்தி உலக மக்கள் எல்லாரும் கேட்கச் செய்யுங்கள்" என்றார்.

திருத்தந்தையும் நற்செய்தியின் உலகளாவியத் தன்மையை வலியுறுத்தும் முதல் வானொலிச் செய்தியை இலத்தீனில் தம் கைப்பட எழுதி வாசித்தார். "வானங்களே, கேளுங்கள். பூவுலகே, பூமியின் கடைக்கோடியில் வாழ்பவர்களே, என் வாயிலிருந்து வருவதை உற்றுக் கேளுங்கள்." என்றர். அந்நாளிலிருந்து வத்திக்கான் வானொலி தூய பேதுருவின் வழித்தோன்றலின் குரலை ஊருக்கும் உலகுக்கு (Urbi et Orbi)ஒலிபரப்பி வருகிறது.

எனவே திருத்தந்தையின் வானொலி உலக பாரம்பரியச் சொத்துக்களில் விலைமதிப்பற்ற ஒன்று. இது இன்று ஒலிபரப்பு வரலாற்றில் மைல் கல்லையும் பதித்துள்ளது. நிகழ்ச்சிகளைக் கேளுங்கள். எம்மோடு, நண்பர்களோடு, இல்லத்தில், பணியிடத்தில் உங்கள் கருதது;க்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

வாழ்க வத்திக்கான் வானொலி! !
வளர்க அதன் நேயர் குடும்பம்!
இயேசு கிறிஸ்துவுக்கே புகழ்!

நம் வானொலியைக் கேட்பது?

வத்திக்கான் வானொலியை மூன்று வழிகளில் கேட்கலாம்.
1.வானொலி அலைகள் வழி
2.விண்கோள் வழி
3.இணையத்தளம் வழி

மேலும் விபரங்களுக்கு:
வத்திக்கான் வானொலி இணையத்தளம்: www.vaticannews.va/ta.html
வத்திக்கான் இணையத்தளம்: www.vatican.va

வானொலி அலைகள் வழி ஒலிபரப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எமது ஒலிபரப்பைக் கேட்பதற்குச் சிற்றலைகளைக் கொண்ட வானொலிப்பெட்டி தேவை. மேலும் விபரங்களுக்கு எமது இணையத்தளத்தைத் திறந்து பாருங்கள்.

விண்கோள் வழி ஒலிபரப்பு

விண்கோள் வழியாக நான்கு சேனல்களில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். விண்கோள் வழியாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய எமது இணையத்தளத்தைத் திறந்து பாருங்கள்.
விண்கோள் சேனல் AOR 1(UTC):INTELSAT 325,5 ° east (Atlantic) - 4097.75 Mhz - Polarization LHCP
விண்கோள் சேனல் AOR2 (UTC) INTELSAT 325,5 ° East(Atlantic) - 4097.75 Mhz - Polarization LHCP
விண்கோள் சேனல் IOR2 (UTC) INTELSAT 62 ° East(Indian) - 4097.100 Mhz - Polarization LHCP
விண்கோள் சேனல் IOR2 (UTC) INTELSAT 62 ° East(Indian) - 4097.100 Mhz - Polarization LHCP
விண்கோள் சேனல் Eutelsat Hot Bird : Eutelsat(13 ° EST)transponder 54(Bouquet Rai),vertical Polarization-11804 Mhz, channel audio 128 Kbit/s
விண்கோள் சேனல் Eutelsat Hot Bird : Eutelsat(13 ° EST) (Bouquet Rai),vertical Polarization-11804 Mhz, channel audio Telepace,FEC 2/3,Symbol rate 27.500.

பன்வலை அமைப்பில் Live Broadcast,Audio on Demand ஆகிய இருவழிகளில் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.முதலில் வத்திக்கான் வானொலி அல்லது வத்திக்கான் இணையத்தளத்தைத் (www.vaticanradio.org) திறக்க வேண்டும்.நம் நிகழ்ச்சிகளின் வானொலி நேரடி ஒலிபரப்பைக் கேட்க, ஐந்து சேனல்களில் ஏதாவதொன்றைத் திறக்கலாம். இந்திய மொழி நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு நான்காவது சேனலுக்குச் செல்ல வேண்டும்.

வத்திக்கான் வானொலியில் நேரடி ஒலிபரப்புகள் முடிந்த பிறகும் நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதியுள்ளது. எனவே நீங்கள் எமது காலை அல்லது இரவு ஒலிபரப்பைக் கேட்கத் தவறினால், எமது இணையத்தகத்திலுள்ள Broadcast on Demand(or Audio on Demand) என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளின்படி சென்று விரும்பிய நிகழ்ச்சிகளை அல்லது மொழிகளைக் கேட்கலாம்.

தமிழ் தினசரி ஒலிபரப்பு

இந்தியா இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு ஒலிபரப்பு அலைவரிசை

காலை இந்திய
நேரம்
UTC மாலை இந்திய
நேரம்
UTC
49MB(5890khz)
41MB(7410kHz)
6.30 1.00 22MB(13765khz)
25MB(11850khz)
41MB(7585kHz)
8.20 14.50

தமிழ் காலை ஒலிபரப்பு மீண்டும் இந்திய நேரம் காலை 7.50 மணிக்கு 31 மீ. பா. 13765 கிலோ கேட்ஸில் இடம் பெறுகிறது.

வழக்கமான காலை நிகழ்ச்சிகள்

மாலை/காலை வழக்கமான நிகழ்ச்சிகள்
ஞாயிறு/திங்கள் பல்சுவை, அஞ்சல் பெட்டி
திங்கள்/செவ்வாய் வாரம் ஓர் அலசல்
செவ்வாய்/புதன் விவிலியத் தொடர்
புதன் / வியாழன் திருத்தந்தையின் மறைப் போதகம்-திருத்தந்தையின் வரலாறு
வியாழன்/ வெள்ளி நேர்காணல்
வெள்ளி / சனி நாடக மேடை
சனி /ஞாயிறு ஞாயிறு சிந்தனை

இறுதி 5 நிமிடங்கள் செய்திகள் (ஞாயிறு மாலை மற்றும் திங்கள் காலை தவிர)

தொடர்பு முகவரிகள்:

வத்திக்கான் வானொலி
இந்திய அலுவலகம்
இலொயோலா கல்லூரி
தபால் பெ.எண் 3301
சென்னை 600 024.
வத்திக்கான் வானொலி
அருட்திரு டீ .ஜே. கிருபாகரன்
ஆயர் இல்லம்
கொழும்புத் துறை
யாழ்ப்பாணம்,இலங்கை.
Vatican Radio
Tamil Programmes
Indian Section
00120 Vatican City
E-mail:tamil@vatiradio.va
Phone No: 0039 0339883893
வத்திக்கான் வானொலி
அருட்திரு தமிழ்நேசன்
சமூகத் தொடர்பு மையம்
தூய வளன் தெரு
பெட்டா, மன்னார்
இலங்கை

புகைப்படங்களும்,தகவல்களும் தந்துதவிய வத்திகான் வானொலிக்கு நன்றி


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு