புனித பவுல்

புனித பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் கி.பி-10ம் ஆண்டில் பிறந்தவர். இவரது யூதப் பெயர் சவுல். ஊர் தர்சு நகரம். இவர் யூதச் சட்டம் நெறிமுறைகளையும் கற்றவர். உலகப் பொது மொழி கிரேக்கம் கற்றவர். கமாலியேல் என்பவரிடம் கல்வி பயின்றார்.
இவர் யூத கோட்பாடுகளையும் பரிசேயர் சமயப் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தவர். எனவே இவர் தொடக்க காலத்தில் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி வந்தார். சவுலாகிய இவர் ஸ்தோவானை கல்லெறிந்து கொல்வதற்காகவும்,கிறிஸ்துவர்களை துன்புறுத்துவதாகவும் இருந்தார். தமஸ்கு நகர் செல்லும் வழியில் இவரை இயேசு கிறிஸ்து தடுத்து ஆட்கொள்கின்றார்.
புனித பவுல்

ஒளியில் மாற்றம்சவுல் பவுல் ஆனது எவ்வாறு ? சவுல் சீறி எழுந்து ஆண்டவருடைய சீடர்களை கொன்று விடுவதாக அச்சுறுத்தி வந்தார்; - ஆண் பெண்களைகொன்றுவிட அனுமதி பெற்று தமஸ்கு நோக்கி வரும் வழியில்,தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ " சவுலே,சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்? " என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் " ஆண்டவரே நீர் யார்? " எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக " நீ துன்புறுத்தும் இயேசு,நானே! உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும் " என்று கூறினார்.
சவுலின் மனமாற்றம்

அக்குரலை உடனிருந்தவர்களும் கேட்டனர். ஆனால் வியப்பில் ஆழ்ந்தனர். சவுல் எழுந்தபோது கண்கள் திறந்திருந்தும் எதனையும் காணும் திறனை இழந்திருந்தார். உடனிருந்தவர்கள் அவரது கைகளை பிடித்து தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள். அங்கே மூன்று நாள் பார்வையற்று இருந்தார். எதுவும் உண்ணவும் குடிக்கவுமில்லை.
அந்நகரில் அனனியா என்ற சீடர் இருந்தார். கிறிஸ்து அனனியாவை கூப்பிட்டார். " ஆண்டவரே இதோ அடியேன் " என்று கூறினார். ஆண்டவர் அவரிடம்,;நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் அங்கே தர்க நகர சவுல் தேடு.. அவர் ஒரு காட்சியை கண்டுள்ளார். அக்காட்சியில் அனனியா என்பவர் வந்து சவுல் பார்வையடைய வேண்டுமென்று தமது கைகளை அவர் மீது வைப்பதாக காட்சி கண்டுள்ளார் கூறினார். அதற்கு அனனியா அவன் கிறிஸ்துவர்களை அழிக்க கங்கனம் கட்டித் திரிபவன் ஆயிற்றே என்று கூற,ஆண்டவர் நீ அங்கு செல்,என் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தேர்ந்து கொண்டவரே அவர்! எனது கருவியாக செயல்படுவார். பிற இனத்தாருக்கும் அரசர்களுக்கும்,இஸ்ரயேல்
மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துரைக்கும் கருவியே! என்றார். என் பொருட்டு அவர் எத்துன்பம் அடைய வேண்டும் என்பதும் அவருக்கு காட்டுவேன் என்றார்.
பவுலின் சாட்சியம்

உடனே அனனியா நகருக்குச் சென்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவர் பெயரால் அவர் மீது கைகளை வைக்க தூய ஆவியின் ஒளி கீற்றுக்கள் அவரது விழிகளை திறக்கச் செய்து அதிலிருந்து செதில்கள் விழுந்தன. மீண்டும் சவுல் பார்வை பெற்றவராய் ஆண்டவரின் ஒளியை பெற்று கிறிஸ்துவின் கருவியாக மாறினார். திருமுழுக்கு பெற்று பவுல் என்ற பெயரோடு உணவும் அருந்தி வலிமை பெற்றார்.

உடனே பவுலடிகளார் தமஸ்குவில் ஆண்டவரைப் பற்றி போதிக்கலானார் அனைவரும் வியப்புற்று கிறிஸ்துவர்களை துன்புறுத்தியவன் தானே என்று பேசிக் கொண்டார்கள். யூதர்கள் வியக்கும் வண்ணம் 'இயேசு கிறிஸ்து " என்னும் பெயரை வல்லமையோடு அறிவித்தார்.

இதனை அறிந்த யூதர்கள் பவுலை கொன்றுவிட எண்ணினார்கள். ஆனால் சீடர்களோ அவரை கூடையில் வைத்து நகருக்கு வெளியே இறக்கி விட்டார்கள். எருசலேம் வந்து சீடர்களோடு கலந்து கொள்ள வந்தார். ஆனால் சீடர்கள் அஞ்சினர். பர்னபா அவரை ஏற்று இயேசுவுக்கு சாட்சி பகர்ந்தார். இருப்பினும் யூதர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவரை சீடர்கள் செசரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இவர்
யூதேயா,கலிலோயா,சமாரியா ஆகிய பகுதிகளில் திருச்சபை வளர்ச்சி அடையச் செய்தார்.

புனித பவுல் -அன்பின் மடல்உரோமை வந்தடைந்து இரு ஆண்டுகள் வீட்டுக் கைதியாகவே இருந்துகொண்டு நற்செய்தியை அறிவித்து வந்தார். பின்பு விடுதலை பெற்று ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றிப்பார் என நம்ப இடமிருக்கின்றது. மீண்டும் கி.பி. 60இல் கைது செய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது.

அன்பு சகோதரர்களே! இயேசுவை யார் சிலுவையில் அறைந்து கொன்றார்களோ,அவர்களிடையே பிறந்து சவுல் பவுலாக மாற்றி " இயேசு தான் உண்மை மெசியா " என்பதை அவர் நாவினாலே அறிக்கையிடும் விதமாக அமைந்தது இந்த மனமாற்றம்.