அழகான விண்மீனே


Star and 3 kings

இமெயில்
இல்லாத நாளில்
இறைமகன் பிறந்ததை 
எப்படி அறிந்தீர்கள் 
ஞானியரே !

ஓராயிரம் விண்மீன்கள் 
கண்சிமிட்டிலில்
நட்சத்திரத்தை 
கண்டது எப்படி?

மனித ஞானத்தால்
விண்மீன் அழைப்பை
புரிந்து கொள்ள முடியாது
நீங்கள் ஞானியர்

கரைகளில் விளிம்போடு 
கிசு கிசுக்கும் அலைகளுக்கு
அர்த்தம் சொல்வீர்கள்

விண்மீன் பாஷையை
நீங்கள் தான் 
புரிந்து கொள்ளமுடியும் 

அது சரி
விண்மீன்
உங்களிடம் பேசிய 
ரகசியம் என்ன?

வெவ்வேறு இடத்தில் 
வாழ்ந்த நீங்கள்
ஒன்றாய் புறப்பட்டது எப்படி?

ஓற்றை நட்சத்திரம் 
நாடுகளை தாண்டிவந்த
ஒற்றையடி பாதையை

நாங்கள்
பார்க்கவேண்டும்

விண்மீனே
உன் பயணத்திற்கு
திசைகளை காட்டியது யார்? 
வானத்தை பிய்த்து கொண்டு
வழிகாட்டிய உனக்கு 
சிறகு கொடுத்தது யார்?

வான் வெளியில் நீ
வரும் வழியில் 
வயல்வெளி மலர்கள்
வாழ்த்துபா பாடியதோ

ஆயிரம் விளக்கேற்றும் 
அழகான ராத்திரியில்  
ஒரு விண்மீன் 
இரவு கண்ணாடியில் 
மின்னி மின்னி
மத்தாப்பாக வானில் ஒளிர்ந்து
உலகின் ஒளியை
ஞானியருக்கு காட்டியது

உன் ஒற்றை ஒளிக்கும் - நீ
காட்டிய வழிக்கும் 
ஏதும் இணையாகுமோ!

குழந்தை இயேசுவே 
முதன் முதலில்
மூன்று ஞானியர்
உன் முகம் பார்த்து
வேத மொழி படித்தனர்

உண்மையின் ஒளி
உன் வீட்டு விலாசம் 
பூமியை எழுப்பி 
புத்துயிர் கொடுக்கவந்த
பாலனே

விழிப்பறவை சிறகடிக்க
இடையர்கள் பார்த்த
ஓளிபறவை நீ

சூரியனையும் விழுங்கும் 
உன் ஒளி
எங்களுக்கு வழிகாட்டடும்.
3kings
 
அ.அல்போன்ஸ் - பெங்களுர்