உழைப்பாளர்களின் பாதுகாவலர் புனித யோசேப்புவிழா

அருட்தந்தை சிலுவைமுத்து ச.ச. தர்மபுரி

Joseph&Jesus புனித யோசேப்பிற்குத் திருச்சபை இரு விழாக்களைக் கொண்டாடுகின்றது.
மார்ச் 19 புனித வளனார் – மரியாளின் கணவர் தொழில்களை செய்யும் முறையின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்
01. உடல் சார்ந்த வேலை
02. மூளை சார்ந்த வேலை
மனிதன் விரும்பாதது உடல் சார்ந்த வேலை
காரணங்கள்
களைப்பு, வருத்தம், வலி, அதிக பொருளாதார வளமில்லாமை
மனிதன் விரும்பாதது மூளை சார்ந்த வேலை

காரணங்கள்
எளிது, நிறைய பணம், புகழ் இன்னும் பல
ஆனால் அடிப்படையான இன்றியமையாததுமானது எது?
உடல் சார்ந்த வேலைதான்…
காரணங்கள்
உணவு, உறைவிடம், உடை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது உடல் சார்ந்த வேலை மூளையின் வேலை… வசதிகள் ஆனால் அதன் விளைவு… உடலுக்குக் கெடுதல் பல அம்மி ஆடியது… உரல் நின்றது இப்போது உரல் ஆடுகின்றது… அம்மி நிற்கின்றது அம்மி போல் இருந்த மம்மிகள் இன்று உரல் போல் உள்ளார்கள். உடல் சார்ந்த வேலைகளில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை இருந்தது
வளர்ச்சி என்ற பெயரில் உடல் சார்ந்த வேலைக்கு முக்கியத்துவம் தராமல் உடல் கெட்டுக் கொண்டு வருகின்றது. உடல் சார்ந்த வேலை செய்பவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கும் போக்கு அதிகம் உருவாகிக் கொண்டு வருகின்றது. அப்படி செய்பவர்களைக் கிராமத்தான் என்றும் மூளை வேலை செய்பவர்களை நகரத்தான் என்றும் பிரிக்கும் போக்கும் உருவாகி வருகின்றது.
ஆனால்,
ரோட்டில் சைக்கில் ஓட்டினால் கிராமத்தான்
வீட்டில் சைக்கில் ஓட்டினால் நகரத்தான்
ஓடுற சைக்கில் ஓட்டினால் கிராமத்தான்
நிற்கின்ற சைக்கில் ஓட்டினால் நகரத்தான்
வீட்டில் கூழ் குடித்தால் கிராமத்தான் … ரோட்டில் குடித்தால் நகரத்தான்…
நடந்து போய் பஸ் ஏறினால் கிராமத்த்தான்… காரில் போய் நடந்து போனால் நகரத்தான்..

உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.. அதனைப் போற்ற வேண்டும் என்று சொல்லுகின்றது நம் இந்தியப் பண்பாடு..
அதனால் தான் விழாக்களே.. உழைப்பின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றது.
• பொங்கல்
• ஆயுத பூஜை
தமிழ்ப் பண்பாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை என்பதை பொன்முடியார் என்ற புலவர் இப்படிக் கூறுகின்றார் பொன்முடியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்புலவர். இவரது 3 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவை 299, 310, 312 வரிசை எண்களில் உள்ளன..

 • பாடல்
 • ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
 • சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
 • வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
 • நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
 • ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
 • களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! (312)
 • செய்தி
 • புலவர் பொன்முடியார் ஒரு தாய். அவர் சொல்கிறார்.
 • (மகனைப்) பெற்றுப் பேணிப் பாதுகாப்பது எனக்குக் கடமை
 • (அவனைச்) சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை
 • (அவனுக்கு) நல்ல நடத்தையை அளிப்பது மன்னனுக்குக் கடமை
 • (அவனனுக்கு) வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்குக் கடமை
 • ஒளிர்கின்ற வாளால் கடும்போரிலே யானைய வெட்டி மீள்வது
 • (என் மகனாகிய) காளைக்குக் கடமை.,

மே தின எப்படி வந்தது?
1880 - ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்!
நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது. அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது.

திருச்சபையில் இது எப்படி வந்தது?
1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர்… 12ஆம் பயஸ் தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு என்று இந்நாளைப் புனிதப் படுத்தி திருச்சபையில் கொண்டாட வழிவகுத்தார். விவிலியத்திலும் ஆறு நாட்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்றும் ஒருநாள் ஓய்வு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் சொல்லுகின்றது.

விவிலியத்தில் உழைப்பு மனிதன் உழைக்கப் பிறந்தவன் தொடக்க நூல்-3:17: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
தொடக்க நூல்-3:19: நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.
சீராக்கின் ஞானம்-40:1: எல்லா மனிதரும் கடும் உழைப்புக்கே படைக்கப்பட்டிருக்கின்றனர்; தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நாள்முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லாரும் அடக்கமாகும் நாள்வரை ஆதாமின் மக்கள்மீது வலிய நுகம் சுமத்தப்பட்டிருக்கிறது. உழைத்தப்பின் ஓய்வு கொள்ள வேண்டும்.
விடுதலைப் பயணம்-20:9: ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.
விடுதலைப் பயணம்-23:16: வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, "அறுவடைவிழா "வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் "சேகரிப்பு விழா "வும் எடுக்க வேண்டும். உழைப்பில் இறைவனை மறக்கக் கூடாது
திருப்பாடல்கள்-திருப்பாடல் 127:1: ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.
திருப்பாடல்கள்-திருப்பாடல் 127:2: வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர். உழைப்பிற்குக் கடவுளின் அருள் தேவை
சபை உரையாளர்-1:3: மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? எரேமியா-12:13: கோதுமையை விதைத்தார்கள்; ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்; ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்.

லூக்காஸ்-5:5: சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
யோவான்-6:27: அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
உழைப்பிற்குப் பயன் உண்டு நீதிமொழிகள்-14:23: கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே. நீதிமொழிகள்-16:26: உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
நீதிமொழிகள்-21:5: திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
உழைப்பை விரும்பு சீராக்கின் ஞானம்-7:15: கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே; இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை.
2 தெசலோனிக்கர்-3:8: எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
உழைப்பு நம் கடமை 2 தெசலோனிக்கர்-3:10: "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.
2 தெசலோனிக்கர்-3:12: இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

இறுதியாக முதல் நூல்- தொடக்க நூல் உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய் (தொ. நூல்3;17)
இறுதி நூல்- திருவெளிப்பாடு அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின் தொடரும் .

திருவெளிப்பாடு(14;13)
01.	உடல் உழைப்பு - கடவுள் படைப்பின் நீட்சி, தொடர்ச்சி
02.	உழைப்பை மதிக்க வேண்டும்
03.	உழைப்பவர்களைப் போற்ற வேண்டும்
04.	உழைப்பவர்களுக்கு உரிய ஊதியமும் விடுப்பும் தர வேண்டும்
05.	உழைத்தால் உடலும் உள்ளமும் மனதும் நன்றாக இருக்கும்.

இந்நாள் இனிய நாளாக இருப்பதாக.. புனித வளனார் அதற்கு நமக்கு உதவுவாராக.மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு பொது