கர்த்தர் கற்பித்த செபம்

our father இஸ்ரயேல் நாட்டில் இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு சீடரை இனம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், அவர் எத்தகைய செபத்தைச் செபிக்கிறார் என்று பார்ப்பார்கள். இச்செபத்தை வைத்தே இவர் இன்னாருடைய சீடர் என்று கண்டு கொள்வார்கள். ஒவ்வொரு போதகரும் - குருவும் தன்னுடைய சீடர்களுக்குத் தனித்தன்மையான, சிறப்பான ஒரு செபத்தைக் கற்றுக்கொடுப்பார். ஆகவே தான் இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, யோவான் தம் சீடர்க்கு இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றனர்.(லூக் 11:1)

இயேசுவும் மிக நேர்த்தியான ஒரு செபத்தைக் கற்றுக் கொடுக்கின்றார். அது மட்டுமல்ல, தமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தம் சீடர்க்கு எப்படி செபிப்பது என்றும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்

கர்த்தர் கற்பித்த செபம்.
கர்த்தர் கற்பித்த செபம் ஓர் உன்னதமான செபம். இதில் செபத்துக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அமைந்துள்ளன. புகழ், ஆராதனை, விண்ணரசின் விழுமியங்கள், அன்றாட தேவை, மன்னிப்பு, சோதனையிலிருந்து விடுபடல் போன்ற சிறந்த அம்சங்கள் இச் செபத்தில் உள்ளன.

இச்செபம் எவ்வளவு புனிதமாக்க கருதப்பட்டதென்றால், இதை ஆதிகாலத் திருச்சபையில் எழுத்து வடிவில் எழுதி வைக்கத் தயங்கினர். எழுத்து வடிவில் உருவாக்கினால் இதன் புனிதத்தன்மையை இழக்க நேரிடும் என்று வாய்மொழியாகவே பிறருக்குக் கற்றுக் கொடுத்தனர். மேலும் இதை யாரும் சுலபமாகப் பயன்படுத்த முடியாது. இயேசுவைத் தங்கள் வாழ்க்கையின் மையமாக, இயேசுவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் இச்செபத்தைச் செபிக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து இச்செபம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதை நாம் யூகிக்க முடிகிறன்றது. நான்கு வடிவ நற்செய்தியில் இரண்டு நற்செய்தியாளர்கள் இச்செபத்தை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்துள்ளார்கள். மத்தேயுவும் (மத் 6:9-13) லூக்காவும் (லூக் 11:2-4)

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கர்த்தர் கற்பித்த செபத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு உள்ளன. இறைத் தந்தைக்குப் புகழ்ச்சி, இவ்வுலகில் அவரது அரசின் வருகை, நமது அன்றாடத் தேவைகளுக்கான மன்றாட்டு, அன்றாடப் பிரச்சனைகளுக்கு, சோதனைகளுக்குத் தீர்வு காணல். நாம் இதைச் செபிக்கும்பொழுது எந்த மனநிலையோடு செபிக்கின்றோம்? நமது வாழ்வுக்கு வழிகாட்டியாக இச்செபத்தைச் செபிக்கின்றோமா என்று ஆராய்ந்து பார்ப்பது நமக்கு நன்மை பயக்கும். இச்செபம் இறைத் தந்தையை போற்றிப் புகழ்வதோடு தொடங்குகிறது.

our father01 "பரவோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!"
இறைத் தந்தையை நாம் புகழ வேண்டும். "கடவுள் மனிதனைப் படைத்ததே அவரைப் போற்றிப் புகழ்ந்து, ஆராதித்து அவருக்குப் பணிபுரியவே" என்கின்றார் புனித லொயோவா இஞ்ஞாசியார். "தந்தையே" என்ற வார்த்தை இறைவனோடு நாம் கொண்டிருக்கும் நெருக்கமான உறவை எடுத்துக் காட்டுகின்றது. அன்பொழுகும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் நெருக்கமான உறவை எடுத்துக் காட்டுகின்றது. பாராமுகமாய் ஏதோ விண்ணகம் என்ற நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஓரு இடத்தில் இருக்கும் கடவுள் அல்ல நம் கடவுள். நமது அன்புக்குப் பாத்திரமானவர் அவர். நம்மை என்றும் எப்பொழுதும் அன்பு செய்யும் ஒரு தந்தை அவர். அவரது நாமம் புனிதமானது. ஆகவே நாம் எத்துணை வணக்கத்தோடு, அன்போடு, மரியாதையோடு அவரது நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பது தெளிவாகின்றது

our father02"உமது அரசு வருக"
இறைவனின் அரசு இயேசுவின் அரசு. இவ்வுலகத்திற்று அடுத்தான உலகார்ந்த வகையிலுள்ள ஓர் அரசு இல்லை. மாறாக ஒவ்வொருவருடைய உள்ளத்தையும், ஆன்மாவையும் ஆளும் அரசு. யூதர்கள் எதிர்பார்த்ததுபோல, உரோமையரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் அரசு. அரசியல் சார்ந்த ஓர் அரசு அல்ல.

"ஆபிராகாமுக்கு வாக்களிக்கப்பட்ட ஓர் அரசு இது. கிழக்கிலும் மேற்கிலிருந்தும்பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்"

our father03"இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் துறையில் வராது. இதோ இங்கே! அல்லது அதோ அங்கே? எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாடசி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது" என்றார்(லூக்கா 17:21). இயேசுவின் அன்பில் விசுவாசம் கொள்பவர்களின் இதயத்தில் அலரது அரசு நிறுவப்படும். இவ்வுலகத் தீமைகளெல்லாம் ஒழிக்கப்பட்டு இதயத்தில் நிறைவுறும், நிலைநாட்டப்பெறும், புதிய வானகமும், புதிய பூமியுமாய் இருப்பதே இறையரசு. "பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும், மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும், மண்ணகமும் மறைந்து விட்டன."(திவெ 21:1)

our father04"உமது சித்தம் நிறைவேறுக"
"உமது சித்தம் நிறைவேறுக" என்று நாம் சொல்லும் பொழுது ஏதோ தவிர்க்க முடியாத ஒரு விதி தான் எனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது. ஆதிக்கம் செலுத்துகின்றது, ஆட்சி செலுத்துகின்றது. ஆட்டிப் படைக்கின்றது என்பது அல்ல அர்த்தம்: மாறாக, இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி, அவருடைய சித்தப்படி நடப்பதேயாகும். இதன் வழியாக நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், நமது வாழ்வின் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்வையும் அவரது கையில் ஒப்படைப்பதே ஆகும். நமது வாழ்வை நடத்திச் செல்லும் ஒட்டுநராக இறைவனை ஏற்றுக் கொள்வதாகும். நமது வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்ற, நிறைவடைய அவரது பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் ஆர்வத்தோடு தேடுவதாகும்.

our father05 "அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும்"
இம்மன்றாட்டின் வழியாக நாம் இறைவனைச் சார்த்து வாழ்கின்றோம் என்பதை நாம் அறிக்கையிடுகின்றோம். எல்லா வயங்களின், நலன்களின், தேவைகளின் தொடக்கமும் முஎவுமாய் இருக்கின்றார். கடவுள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நமது அன்றாடத் தேவைகளை அவர் அறிந்துள்ளார். அவற்றைக் கொடுத்து நம்மைப் பராமரித்துக் காத்திடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இச்சொற்றொடர் எடுத்துக் காட்டுகின்றது.

our father06"சோதனையில் விழவிடாதேயும்"
கடவுள் சோதனைகளை அனுப்புவதில்லை. மாறாக நம்மைச் சொதிக்கின்றார். நாம் அவரோடு, அவரைச் சார்ந்து வாழ்கின்றோமா என்று நிர்ணயிக்கப் பார்க்கிறார். சோதனைகள் தீயோனிடமிருந்து வருகின்றன. இதை அவர் அனுமதிக்கின்றார். நாம் அவற்றை இனம் புரிந்து கண்டு கொண்டு தீயோனோடு போராடி வெற்றிக்கொள்ள வேண்டும். இயேசுவின் சீடர்களாய் நாம் இருப்பதால் இச்சோதனைனளிலிருந்து நம்மை அவர் பாதுகாக்க வேண்டுமென்று நாம் செபிக்க வேண்டும். தீயோனிடமிருந்து சில காரியங்கள் வருகின்றன என்று தேர்ந்து தெளியும் வரம் இறைவன் நமக்கு அருளும் ஒரு கொடையே. சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. நம் அனைவருக்குமே சோதனைகள் வருகின்றன. பொன்தீயில் புடமிடப்பட்டுத் தூய்மையாவதுபோல சோதனைகள் நம்மை புடமிட்டுப் பார்க்கின்றது. அவை மீது வெற்றிக் கொள்பவனே இயேசுவின் உண்மையான சீடன். நமது பலத்திற்கு அப்பாற்பட்ட வகையில் இறைத்தந்தை நம்மைச் சோதிக்கமாட்டார்.

our father07 "உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்." 1கொரி 10:13

our father08மன்னிப்பு: "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும்."
நாம் இறைவனிடமிருந்து மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் நிபந்தனை ஒன்று உண்டு. பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்புப் பெற்றவன் மன்னிப்புத் தரவேண்டும். இறைவன் நமது குற்றங்களை எத்தனை தடவை மன்னித்துள்ளார் என்ற உணர்வு நம்மில் இருந்தால்கட்டயாம் நாமும் பிறரது குற்றத்தை மன்னிக்காமல் இருக்க முஎயாது. இயேசு பேதுருவை மன்னித்து ஏற்றுக்கொண்டார். நாம் ஒப்புரவு அருட்சாதனம் (பாவசங்கீர்த்தனம்) பெற்றால் மடடும் போதது, பிறது குற்றங்களையும் மன்னி வேண்டும். நாம் ஒப்புரவின் தூதுவர்களாக இருக்க அழைக்கப்புடுகிறோம் என்ற புனித பவுல் அழகாக விளக்கிக் கூறுகின்றார்"

our father09"அவரே (கடவுளின்) கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். our father10கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்." (2கொரி 5:18-21)

ஆம், அன்பார்ந்தவர்களே, இத்தகைய உன்னதமான மன்றாட்டை அர்த்தம் புரிந்து செபிப்போம். நமது வாழ்க்கை மாறுவது உறுதி.

கருத்தும்-ஒவியமும் அருட்தந்தை தம்புராஜ் சே.ச. ஆவியின் அனல் மார்ச்2013