வருக புத்தாண்டே வருக!

இனிய புத்தாண்டே நீ பிறக்கும் இவ்வேளையில்         
மேலும் இரு விழாகளை கொண்டாட வருகிறாய்.
வருக புத்தாண்டே வருக!

விண்ணின்று விடியல் எமை தேடி வந்தது
விண்ணின்று மண்ணிற்கு வளம் சேர்க்க இயேசுவை
சுமந்து வந்த மாமரிக்கு புகழாரம் சூட்டி மகிமை சேர்க்கும் நாளே!

தொழுவமதில் எமக்காய் பிறந்த மழலைக்கு 'இயேசு"
என்னும் பெயர் சூடி நன்னாளாம் இந்நாள்.
இந்நாளே புவிமாந்தர் புனிதம் பெற முத்திரை பதிக்கப்பட்ட நாள்.

'தாயே நீ! கருவை சுமக்காமல்
கருணையைக் சுமந்ததால்
உலகிற்கெல்லாம் தாயானாய்" - அன்னை தெரெசா.

அன்னையே மரியா எனும் இலக்கியம்
இயற்கையின் மகா சக்தியாக திகழ்கின்றது.
'என்று தூய ஆவி அன்னையிடம் நிழலிடும்"
என்று வானதூதர் கூறினாரோ அன்றே உலக
மகா சக்தியோடு அன்னை இணைந்து விட்ட பெருங்காவியமே !

மாட்டுத்தொழுவத்தில் மகனை பெற்றெடுத்தாள்
என்ற வார்த்தைகளின் பொருளியினை உணர்ந்த
புனித அசிசியார் இயேசுவின் பிறப்பை 'குடில்" என்ற
கலை வடிவத்தில் சித்தரிக்கின்றார்.

விடுதலை நாயகனின் அன்னை மரியா!
அன்னையானவள் இயற்கையின் அடையாளம்
எப்படிஎனில் பூமி தாய் அனைத்து சக்திகளையும்
தன்னகத்தே தாங்கி நிற்கின்றாள்.
அதுபோல அன்னை மரியா பன்னிரு விண்மீன்களை
சூடியவளாகவும் நிலவின் மேல் நிற்ப்பவளாக திகழ்கின்றாள்.

அனைத்து சக்திகளை உள்ளடக்கிய மழலை
மன்னவனை தாங்கிய உதிரம் பேறு பெற்றதே!
எனவே அன்னைமரிக்கு மகிமை சேர்க்கும் நாளாக
இந்நாள் அமைகின்றது.

அன்னை மரியா இறைவன்
சிந்தனையில் வரையப்பட்ட ஒவியம்.
எனவே தான் அற்புத காவியமாக திகழகின்றாள்
அக விடுதலைக்கு அடித்தளமாகின்றாள்.
ஒட்டு மொத்த சமுதாய விடுதலைக்கு
மூலகாரணியாக திகழ்கின்றாள்.

இயற்கையெல்லாம் இணைகின்ற எழில் நிலையை
சுட்டி காட்டி நிறை விடுதலை வாழ்வை நிஜமாக்க
இனிய புத்தாண்டில் சபதம் எடுப்போம்.
நாமும் அன்னை மரியின் கரங்களைப் பற்றி கொள்வோம்.

அன்னை மரியின் உண்மை விடுதலை கூறுகளை நமதாக்கி
ஆரவரரமில்லாத புனித புரட்சி பணியை
சமுதாயத்தில் ஊன்ற செய்வோம்.
அடுத்தவரின் நலனில் எந்த பேதமின்றி பங்கேற்ப்போம்
என்று புத்தாண்டில் உறுதி கொள்வோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!