பிறரன்பு

அ.ஜெயசீலன் - தாம்பரம் சென்னை தொடர்புக்கு 9444316398

அன்னை மரியாஅதிதூதர்களில் ஒருவரான கபிரியேலை கடவுள் நம் அன்னை மரியாளிடத்தில் அனுப்பித் தன் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று வரச் செய்தார். அந்த அதிதூதர் கபிரியேல் அன்மையிடம் அந்து கடவுளின் வாழ்த்துச் செய்தியை முதலில் கூறிய போது நம் அன்னை அதனைக் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொண்டார். என்று லூக்கா 1:26-28 வரை கூறப்படடுள்ளது. பிறகு 39-வது வசனத்தைப் படிக்கும்போது "அதன்பின் மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" என்று உள்ளது.

அன்புக்குரியவர்களே இங்கு ஓர் எழுதப்படாத உண்மை உள்ளது. அந்த உண்மை மறைவாக உள்ளது. இதைப் பற்றி பல இடங்களில் நற்செய்தி கூட்டங்களில் பேசி உள்ளேன். அதை இப்போது சுருக்கமாக உங்கள் முன் வைக்கின்றேன்.

வானதூதருடன் உரையாடல் முடிந்து உடன் யூதேயா மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு ஏன் புறப்பட்டுச் சென்றார் என்றால் லூக்கா 1:36 இல் " உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் என்ற செய்தி அன்னைக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்த கராணத்தினால் நம் தேவதாய் உடனே புறப்பட்டார். வயதான காலத்தில் சருவுற்றிருந்த எலிசபெத்திற்கு உதவி செய்திட எண்ணமகொண்டவராக செல்கின்றார். இதைத்தான் பிறரன்பு என்று சொல்கிறோம். அது மாத்திரம் அல்ல மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார் என்று 56- வது வசனத்தில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. அது போல் நாம் செய்ய முடியுமா?

இன்றைய நவீன உலகில் அனைத்து போக்குவரத்து வசதிகள் இருக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கின்றோம். வாய்ப்புகளோ இல்லாத காலத்தில் நம் அன்னை மரியாள் நாசரேத்தூர் என்ற ஊரில் இருந்து யூதேயா மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார் என எழுதப்பட்டுள்ளது.

திருக்குறள் போல் இரண்டு வரிகளில் இந்தச் செய்தியைக் கூறுகின்றார் புனித லூக்கா. ஆனால் இந்த இரண்டு வரிகளுக்குள் சென்று பாருங்கள். நம் அன்னை மரியாள் எவ்வளவு துன்ப துயரங்களை ஏற்றிருப்பார் என்பதும், எவ்வளவு தியாக மனப்பான்மை கொண்டிருந்தார் என்பதும் புரியும். இது தான் பிறரன்பு!

ஆம் அன்பர்க்குரியவர்களே மேலே குறிப்பிட்ட இரண்டு ஊருக்கும் இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 90 கி.மீ. உள்ளது. இது மலை நாடு. இந்த இடத்திற்கு என் வாழ்வில் கடவுளின் இரக்கத்தால் இரண்டு முறை சென்று வந்துள்ளேன். இன்று இந்த ஊருக்குச் செல்ல அழகிய தார் ரோடு போடப்பட்டுள்ளது. குறுக்குச் சாலைகளும் போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன. இதையே ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அல்லது நூறாண்டுகள், ஐநூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகள் எனப் பின்னேக்கிப் பார்த்தால் எத்தளை கி.மீட்டர் தூரமாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவ்வளவு தூரத்தையும் நம் அன்னை மரியாள் தன்னந்தனியாக விரைந்து சென்று செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தி உடனிருந்திருக்கிறார்.

இன்றையச் சமுதாயத்தில் நாம் இப்படிச் செய்ய முடியுமா? நம் குடும்பத்தில் வயதான தம்பதிகளுக்குக் குழந்தை பெறும் பாக்கியம் கிடைத்தவர்களை வாழ்த்த மனம் இருக்குமா? கிண்டலும், கேலியும் செய்து வயதானவர்களை மனம் நோகடிப்போம். இந்த வயதிலும் இந்தக் கெழடுகள் செய்யும் காரியத்தைப் பார்த்தீர்களா என்ற சொல்லுவோம். இன்றைய தலைமுறையினர் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.

அன்று யூத குலத்தில் ஓர் இளம் பெண் தன்னந்தனியாக வீட்டைவிட்டு, ஊரைவிட்டு மிக தொலைவில் உள்ள ஊருக்குப் போக முடியுமா? அக்காலத்தில் ஒத்தையடிப் பாதைகளும் காடுகளும், கரடுமுரடான பாதைகளும் உள்ள பகுதியாகவும், ஆங்காங்கே கள்வர்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தன. ஆண்கள் தனியாகச் சென்றோலே அவர்களைக் காயப்படுத்தி அவர்களின் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வர் என விவிலியம் கூறுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அன்னை துணிவுடன் சென்றார். எத்தனை நாட்கள் நடந்திருப்பார். எங்கே உணவு உண்டிருப்பார், எங்கே உறங்கினார், என்ன பாதுகாப்பான இடம் இருந்திருக்கும்? என்ற சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

அன்புக்குரியவர்களே, அன்றைக்கு நாம் தங்கி இருக்கும் ஊரில் இருந்து வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை வெல்வதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் வேளாங்கண்ணிக்குச் செல்லும் நாட்கள் வித்தியாசப்படும். போக்குவவரத்து அதிகம் இல்லாத நாட்களில் எத்தனை நாட்கள் இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். குறைந்தது 300 ஆண்டுகளுக்க முன் நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் முப்பது நாட்கள் நடந்திருப்பார்கள்.

அன்னை மரியா- இறைமகனின் தாய்மேலும் இன்றைக்கு வழிநெடுகவும் உணவுக்குப் பஞ்சம் இல்லை. பல இடங்களில் இலவசமாக, தண்ணீர், மோர், உணவு, தங்கும் இடம் போன்றவை கிடைக்கின்றன. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் அன்னை மரியாள் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் விரைந்து சென்று எலிசபெத்துக்கு உதவிட வேண்டும் என்பதாகும். இது தான் பிறரன்பாகும்.

மேலே கூறிய கருத்துகளை நம் தாய்த் திருச்சபை ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்ததினால் தான் அன்னைக்குப் புகழாரம் சூட்டுகின்றது. அன்னையின் தியாக உள்ளத்தையும், துணிவையும் அவர்பட்ட துன்பத்தையும், கண்டுணர்ந்து அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்றது. இதையெல்லாம் உணராத பிரிவினைவாதிகள் நம் அன்னையைப் பற்றி தவறாகப் பேசி அவர்களின் தீய எண்ணங்களை நம் மக்கள் உள்ளத்தில் விதைக்கின்றனர். இதன் மூலமாகத் தாங்கள் வாழ வழிவகுக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி விவிலியம் தெளிவாகத் கூறுகின்றது. "ஆகவே நாம் குழந்தைகளைப் போல் இருக்கக்கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைகழிக்கப்படக்கூடாது. (பே 4:14)

இறுதியாக இப்படிப்பட்டவர்களுக்கும் நம் அன்னை பரிந்து பேசுகின்றார். இவர்கள் நம் அன்னையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நம் அன்னை இவர்களையும் தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு அன்பு செய்கின்றார் இதுவும் பிறரன்பே!.

நன்றி- திருஇருதயத் தூதன் ஆகஸ்ட் 2014