வைரவிழா நாயகன் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களுக்கு வாழ்த்துரை!


திருமதி. அருள்சீலி அந்தோணி - ஆலந்தூர் - சென்னை

வைரவிழா நாள் 03/07/2015


neethinathan60bd

பாசமிகு ஆயர் அவர்களே!
இன்று 60வது ஆண்டு பிறந்த நாள் காணும் நீவீர் தாயின் கருவில் உருவாகும் முன்பே இறைத்தூதராக இறைவன் தேர்ந்துக் கொண்ட நாளிதுவோ! அன்று ஆபிரகாமை - மோசேவை - யோசுவாவை - தாவீதை - பேதுருவை தேர்ந்துக் கொண்ட இறைவன், கக்கணூர் திருவாளர் அந்தோணிசாமி - லூர்துமேரி தம்பதியரின் தவபுதல்வனாக இந்த அவணியை முத்தமிட்ட செய்த நாளும் இதுவன்றோ! இறைவரலாற்றில் பொறிக்கப்பட்ட நாளாக ஆனதும் இன்றுதானே!

அண்ணலே
செங்கை மாநகரில் தலத்திருஅவை மாமன்றம் நின் பிறப்பின் வைரவிழா காணும் வேளை இயேசுவின் பாதையில் இறையரசு பயணம் பயணிக்கும் இறைகுலம் - குருகுலம் இணைந்து பேருவகையோடு இன்று வைரவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

நின் வாழ்வில் முத்தான மூன்று விழாக்கள். நிறைவாழ்வில் உமை நிலைக்க செய்யும் நினைவலைகளாகும். 1. நீவீர் மண்ணை முத்தமிட்ட நாள் - 03/0/1955. 2. நீவீர் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டநாள் -09/05/1987. 3.நீவீர் செங்கை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக திருநிலைப்படுத்திய நாள் - 29/09/2002.

வைரவிழா நாயகனே!
இறைவரலாற்றில் நீவீர் வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது. ஏனெனில் உம் தலைமை ஏற்று செங்கை தலத்திருச்சபை ஏழைகளின் ஆசாரக்கூடம் என்பதை மறவாதீர்! உம் அழைப்பு அத்தகையோருக்கே! வறியோருக்கு வாழ்வளிக்க வந்த இறைத் தொண்டரே! இயேசுவின் பாதையில் இறையரசு பயணம் பயணிக்கும் வேளையில் நும் நீதி வழி நிறைவாழ்வு எனும் விருதுவாக்கு எம் மறைமாவட்டத்தின் இறையரசு பயணத்தின் மைல்கல் ஆகும்.

ஆயர் பெரமானே!
எமது மறைமாவட்டம் நும் தலைமையில் மாமன்றம் காணும் வேளை - பத்து அருள் வாழ்வின் இறையரசின் திட்டங்களை தீட்டி இறை ஒன்றிப்பில் இறைகுலம் - குருகுலம் நீதி வழி நிறைவாழ்வை யாம் சுவைக்க வித்திட உயிர்த்த ஆண்டவர் நும் வாயிலாக சுவைக்க யாம் பேறு பெற்றோம்! என்பதைனை பணிவோடு நின் பாதம் சமர்ப்பிக்கின்றோம். செங்கை மாநகரே நீ பேறு பெற்றாய் ! ஏனெனில் நின் மக்கள் வறியோரை வணங்கிடும் இறைத்தூதரை கண்டதால்...

எம் இதயம் நிறைந்தவரே!
ஆயராக பெறும் பேற்றை பெற்றாய்! எம் ஆயரே இறைமகனின் வார்த்தைகள் சமத்துவ சமுதாயம் படைத்திட அறைக்கூவல் விடுக்கின்றது. முப்பெரும் புனிதர்களான புனித தோமாவும், அன்னை மழைமலைத் தாயும் - புனித வளனாறும் உடன் பயணிக்கின்றனர்.

ஆயரே! வைரவிழா காணும் இந்நாள் திருச்சபை வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய பொன்நாளாகும். நின் தலைமை! இயேசுவின் தலைமை என்பதனை எமது இதயமதில் பதிவுச் செய்து இறையாட்சி இம்மண்ணகம் காண வாஞ்சையோடு பிறந்தநாள் வாழ்த்துரை வழங்கி வணங்கி நிற்கும் இறைகுலம்.