அன்னை தெரசா


கவிஞர்: அ.ஜோசப் ஜெரால்டின் -கோடம்பாக்கம்- சென்னை24

mother teresa

ஒவியர்: அபிஷேக் டோமினிக் - கோடம்பாக்கம் -சென்னை24
தூதரக விசா பெற்று வந்து
துறவோடு மட்டுமே உறவோடு வாழ்ந்திருந்தால்
அருட்சகோதரியாகவே அழைக்கப்பட்டிருப்பார்
அன்னிய தெரசாவாகவே அடக்கப்பட்டிருப்பார்

இவரே,
துறவோடு சேவைக்கு உறவிட்டு உழைத்தார்
தொழுநோய் கொண்டோரோடு தோழமை படைத்தார்
தன்னைத்தான் நேசியாமல் தவித்தோர்க்காய் யாசித்தார்
இல்லாதோர்க்கு இரங்குதலே இறைப்புகழாய் வாசித்தார்

ஆம்,
தூதரக விசா பெற்று வந்ததுடன்- இறை 
தூதரின் விலாசம் கற்று வாழ்ந்ததால்
அன்னை தெரசாவாக அழைக்கப்பட்டார்
அடக்கம் கண்டும் அமரத்துவம் கொண்டார்.

நாட்டின் அடிப்படையில் அன்னிய தெரசா - சேவை
நாட்டத்தின் அடிப்படையில் யாவர்க்கும் அன்னை தெரசா....