தவக்காலம் 2011

நாம் அன்பில் மலர-போராட, வெற்றிக்கான இறைவன் அருளும் பொற்காலம்.

Lent 2011 இறை மானிட உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம். இவ்வுறவை புதுப்பித்து கொள்ளlent மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உரையாடல் செய்ய நம்மை அழைக்கின்றது இத் தவக்காலம்.

நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மோடு உறவாடிய இறைவன்- இத்தவக்காலத்தில் தன் பாடுகளின் வழியாக நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை உறவை உறுதிபடுத்த நமக்கு அழைப்பு விடுக்கின்ற காலமே இந்த தவக்காலம்.

இறைவாக்கினர்கள் வழியாக பேசிய இறைவன் நீதிதலைவர்- அரசர்கள் வழியாக மானிட இனத்தின் இடறிய பாதையைச் சமன் செய்யவே இறுதியாக அன்னைமரி வழியாக தன் அன்பு மகனை மானிடர்பால் கொண்ட அன்பின் உச்ச கட்டமாக அமைகிறது இயேசுவின் வருகை. வந்தவர் 12 வயது வரை பெற்றோரின் பாதுகாப்பிலும் இறைவனின் திட்டத்தில் 30 வயது வரையிலும், சமுதாயாத்தை பகுப்பாய்வுச் செய்து சிதறிய மானிடரை வென்றெடுக்க சித்தம் கொண்டார். அதன் உச்சகட்டம் தான் திருமுழுக்கு யோவானிடம் பெற்ற யோர்தான் நதிகரை அதிசயங்களை நினைவு கூறுகிறது.

திருமுழுக்கு யோவானும் இறைவனின் மீட்பு திட்டத்தின் ஓர் அங்கமாக இயேசுவுக்கு முன்பாகச் சென்று மேடுபள்ளங்களை சமன் படுத்துகின்றார். மீட்பர் வருவார் என்பதை பறைசாற்றுகின்றார். எனவே திருமுழுக்கு யோவானும்ää இயேசுகிறிஸ்துவும் இறைவனின் மீட்பு திட்டத்தின் கருவிகளாவார்.

இங்கே திருமுழுக்கு யோவானின் பிறப்பு சக்கரியாவுக்கு கபிரியேல் வானத்தூதரின் மங்கள செய்தியாக அருளப்பட்டது. இறைமகன் இயேசுவக்கு கன்னி மரியாளின் கருவறை. இங்கே கபரியேல் வானத்தூதரின் மங்களசெய்தி சற்று கூர்ந்து கவனியுங்கள்.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் பிறப்பு முதிர்ந்த வயது மலடி எனப்படும் எலிசபெத், இங்கே வாழ்த்துரை செய்தி சக்கரியாவுக்கு வழங்கப்பட்டது. இதே நேரம் இங்கே! இறைமைந்தன் பிறப்பு கன்னி கருதாங்கி ஒரு மகனை பெறுவாள் என்று எசாயா இறைவாக்கினர் செய்தி. கபிரியேல் வானத்தூதன் வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்டு மீட்பர் பிறந்தார். இந்த இரு உன்னதர்களின் பிறப்பு இவ்வுலகை மீட்கும் கருவியாக அமைந்தது. இறைவனின் அளவுகடந்த அன்பால் இயேசு 30ம் வயதில் மூன்றாண்டு போதனைகளை மேற் கொண்டார். ஓய்வு உறக்கமின்றி காடுமேடுகளை கடந்தார். மூன்றாண்டு போதனைகள் முக்காலமும் உணர்ந்திடும் வண்ணம் இவரது பாடுகள் நமக்கு உணர்த்துகின்றது. அவர் ஏற்ற துன்ப துயரங்கள், போராட்டங்கள், சவால்கள், மனமாற்றங்கள் அனைத்தும் நம்வாழ்க்கையை புரட்டி பார்த்து குறைகளை களைந்து, நிறைகளை காண அழைக்கும் காலம் தான் தவக்காலம்.

நாம் பிறரன்பில் வரைவும், மலர்ந்திடவும் அழைப்பு விடுக்கும் காலமாகும்.

அன்பர்களே ! வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும். இதேபோல் உறவு என்று ஒன்று இருந்தால் உரசல்களும், விரிசல்களும் உறவின் பங்காளிகளாக அமைந்து விடுகின்றது. அதேபோல இறை-மனித- உறவிலும் ஏமாற்றங்கள், விரிசல்கள், போராட்டங்கள் ஏற்படுவது சகஜமே! இதனை உரையாடல் வழியாக இறைவனோடு மன்னிப்பு பெற நம்மை தாயாரிக்கும் காலம் தான் தவக்காலம்.

ஏன் இந்த இறைவன் எனது விண்ணப்பங்களை மட்டும் ஏற்பது இல்லை? ஏன் நமது தேவைகளை புரிந்துக் கொள்ள மறுக்கின்றார் என்று எத்தனையோ புண்பட்ட உள்ளங்களின் புலம்பல்களாகும்! அதிலும் சிறப்பாக இறைபக்தியிலும், ஞானத்திலும் இறைவனோடு உறவு கொண்டவர்களோடு இறைவன் அதிகம் போராடுகின்றாம். தொ.நூல் 32 அதிகாரத்தில் யோபு இறைவனோடு போராட வேண்டியுள்ளது. ஏனென்றால் இறைவனின் உன்னதமான இந்த உறவை புரிந்துக் கொள்ள மனிதனும் போராட வேண்டியுள்ளது.

இங்கே இயேசு சிலுவையில் கூடுமானால் இந்த துன்பகலம் என்னை விட்டு அகலட்டும் என்றார். இறைமகனுக்கு இந்த நிலை என்றால் மனிதன் என்பவன் இறைசாயல் தானே! என்பதை பதிவு செய்திடுவீர். lent இறைவா நீர் எதை வேண்டுமானாலும் கொடும் இதைமட்டும் துன்பம் மட்டும் கொடுத்துவிடாதீர் என்று வேண்டுவது பலரின் வேண்டுதலாகும். ஆனால் சில நேரங்களில் எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது தான் நடக்கும்.

இறை-மனித போராட்டம் என்பது நம்மை பலவீனப்படுத்தி கொள்ள அல்ல! மாறாக நமது உறவை பலப்படுத்திக் கொள்கின்றோம். நாம் விழிப்போடு இருந்து எங்கே எப்படி இறைவன் உறவு பாலம் அமைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள தவக்காலம் அழைக்கின்றது. தவமுயற்சிகளை ஏற்போம். தானதர்மங்களை பகட்டாக அல்ல, மறைவாக உதவிசெய்து பலம் சேர்ப்போம்! செபம், தவம் தர்மம் போன்ற மூன்று வழிகளில் இறை மனித உறவை வளர்த்தெடுப்போம்.

திருமதி. அருள்சீலி அந்தோணி சென்னை 88.