கண்களின் வார்த்தைகள்

செய்திகள் செய்திகளாக, அறிவுரைகள் அறிவுரைகளாக தத்துவங்கள் தத்துவங்களாக இருக்கும் வரை அவை நம்மை கவர்வது இல்லை, உள்ளத்தில் தாக்கங்களை உருவாக்குவதுமில்லை.
st.peterஅவைகளே நறிசெய்தியில் பாத்திரங்களாக கதை மாந்தர்களாக உருவம் பெற்று உலாவரும் பொழுது நம் நெஞ்சில் உணர்வு கூறுகளாக அழியா இடம் பெற்றுவிடும்.
நீர் உயிருள்ள கடவுளின் மகன் (மத் 16:16) என்று உரக்கசொன்ன பேதுரு அதே கடவுளின் மகனை சபித்ததும் பின் உணர்ந்து அழுததும் நமக்கு இறை இயல் தத்துவத்தை விளக்கும் அரிய நிகழ்ச்சி - இது திருந்தி வந்த மகனை கட்டி அணைத்து கண்களால் முத்தமிட்ட கண்ணீர் காவியம். கண்ணீரை துடைத்து விட்டு காட்சியைப்பார்ப்போம்.

தலைமை குருக்களின் வீட்டு முற்றம்

வீட்டின் உள்ளே தலைமை குருக்களும் தலைமை சங்கத்தாரின் முன்பும் “மெசியா நான் தான்” (மத்14:62) எனறு இயேசு கூறும் பொழுது சிலர் அவர் மேல் துப்பவும் அவர் முகத்தை மூடி அறையவும் தொடங்கினார்கள். அதைவிட வீட்டின் வெளிமுற்றத்தில் காவலர்கள், முன்பு பேதுரு இயேசுவை சபிக்கும் பொழுதுதான் அவருக்கு அதிகம் வலித்திருக்கும். முன்றாண்டுகள் கூடவே வாழ்ந்து வந்த பேதுரு இயேசுவை சபிக்கும் நிலைக்கு விழுந்ததையும் பின் மனந்திருந்தி எழுந்ததையும் காண்போம்.
பன்னிரு சீடர்களில் பேதுரு வினா எழுப்பி இயேசுவை வினாவியர். இவர் தான் “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?” (யோவான் 6:66)
எங்கு செல்கிறீர்? (யோவான்13:36)
ஏன் தொடரமுடியாது? (யோவான்:13:37)
எங்களுக்கு என்ன கிடைக்கும்? (மத்தேயு 19:67)
குற்றம் செய்தால் எத்துனை முறை மன்னிப்பது? (மத்தேயு 18:21)

பேதுருவின் அறிமுகம் புதியது

jesus&peterசீமோன் பேதுரு இயேசுவின் காலில் விழுந்து “ஆண்டவரே பாவியென்னை விட்டு அகலும்” என்று கூறியவரை தான் அருகில் அழைத்து பாத சீடராக ஏற்றுக்கொண்டார். மீன் பிடித்தவரை மனிதரை பிடிப்பவராக மாற்றினார். பாறையானவர் ஜெத்சமனி தோட்டத்தில் இயேசுவோடு சென்றபொழுது சற்றே தடுக்கி விழுந்துவிட்டார்.

நற்செய்தி அவர் விழுந்தை மெல்ல மெல்ல கூறுகின்றது. ஐந்து நிலைகளில் ஒருமணிநேரம் அவரால் விழித்திருந்து ஜெபிக்க முடியவில்லை. அவரின் ஆழ்ந்த தூக்கத்தை மூன்று முறை எழுப்பியது இயேசுதான் இது முதலாவது.
இயேசு கைது செய்த பொழுது குழப்பத்தில் தன் வாளை எடுத்து தலைமை குருவின் ஊழியனை தாக்கினார். இயேசு தந்தையை கேட்டிருந்தால் பன்னிருபடைகளை அளித்திருப்பார். இவர் ஜெபம் செய்யாததால் செய்ததெல்லாம் சரியில்லாமல் போனது - இது இரண்டாவது தவறு.

ஆண்டவரே உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாயிருக்கிறேன் (லூக் 22:33) என்றவர் இயேசு கைது செய்து அழைத்து சென்ற பொழுது சீமோன் பேதுரு “தொலைவில் அவரை பின் தொடர்ந்தார்" (மத் 26:75). இயேசுவோடு வாழ்ந்த பழக்கத்ததில் அவரைவிட்டு விலகாமல் அவரை பின் தொடர்ந்தார்.
வாளை எடுத்த கையில் இருந்த வீரம் கால்களில் இல்லை. அதனால் தொலைவில் பின் தொடர்ந்தார் இது முன்றவதாக காண்கின்றோம்.

தன் ஆண்டவரை வீட்டின் உள்ளே அழைத்து சென்றபொழுது பேதுரு தனது உடலின் குளிரை போக்குகின்றார். ஊழியரும் காவலரும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவரும் காவலருடன் நின்று கொண்டிருந்தார்.
ஆவி ஊக்கமுள்ளது தான் ஊன் உடலோ வலுவற்றது என்று கூறியதைப் போல் அந்த உடல் அங்கே தூக்கம் போட்டது இங்கே குளிர் காய்ந்தது இது நான்காவது நிலை.

கீழே விழுந்த நிலையை கவனித்தால் நடந்தார்- நின்றார் அமர்ந்தார். peter denying jesus பேதுரு தொலைவில் இயேசுவை பின் தொடர்ந்து நடந்தார் . காவலருடன் வீட்டின் முன் முற்றத்தல் நின்றவர் பின் அவாகளுடன் அமர்ந்து குளிர்காய்ந்தார்.

கடைசிநிலைக்கு வருவோம்………

இரவு விருந்தில் எல்லோரும் இடறல் பட்டாலும் நான் இடறல்படேன் என்று இயேசுவிடம் கூறினார். அவரோ இன்றிரவே கோழி இருமுறை கூவுமுன் என்னை மும்முறை மறுதலிப்பாய் என்றார். (மாற் 14:29) அதைப்போலவே அன்றிரவு ஊழியக்காரி ஒருத்தியிடம் எனக்கு தெரியாதம்மா என்றார். வேறெருவனிடம் இல்லை என்றார். மற்றெருவனிடம் தெரியாது என்று சபிக்கவும் தொடங்கினார். இது ஐந்தாவது நிலை

இயேசு அதே இராஉணவில் சொன்னது மீண்டும் ஞாபகம் வருகிறது “சாத்தான் சீமோனே உன்னை கோதுமையைப போல் புடைக்க உத்தரவு பெற்று கொண்டான் என்றார் அந்த சாத்தான் பேதுருவை புடைத்த இடம் இது தான்
காரணம் பேதுருவின் விசுவாசம் விலகிய நேரம்
இங்கே இதயத்துள் ஒரு வேதனை.
பேதுரு சந்தர்பவாதத்தில் சறுக்கி விழுந்த படிகளைப் பார்த்தோம். அவர் மீண்டும் எழுந்ததைக் காண்போம்.

முதலாவதாக அவரின் கவனத்தை கவர்ந்தது கோழி கூவிய சப்தம் இயேசு கூறியது போல் இரண்டு முறை கோழி கூவியது.
இயற்க்கையும் இறைவனின் வார்த்தையை கேட்டு நடப்பதைக் காணலாம்.

இரண்டாவதாக பேதுரு மனந்திரும்பிய நிகழ்ச்சியை வலுவான ஆதாரமாக லூக்காஸ் ஒருகாட்சியை காட்டுகின்றார். ஆண்டவர் திரும்பி பேதுருவின் “உற்று நோக்கவே” (லூக் 22:61). என்று லூக்காஸ் எழுதிய வரியை மீண்டும் கூர்ந்து பார்போம். இயேசு “உற்று நோக்குகின்றார்” (looked) என்றார்
பார்த்தல் என்பதற்கும் நோக்குதல் என்பதிற்கும் ஒத்த அர்த்தமுள்ள சொற்களாயினும் ஆழ்ந்து பார்க்கும் பொழுது பார்ப்பது என்றால் கருத்தின்றி பார்ப்பதாகும். நோக்குதல் என்றால் கருத்தோடு பார்ப்பதாகும் . ஆங்கிலத்தில்look என்போம் விவிலியத்தில் Looked into என்று போடப்படிருக்கின்றது.
கண்ணோடு கருத்தும் கவனித்தலும் இணைவதாகும். அதுவே நோக்கினார் என்பதாகும்.
கண்பார்வையும் கருத்து பார்வையும் எளிதில் புலப்படாதவற்றை நோக்கி பார்க்க புலப்படும் என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். உள்ளத்து உணர்வுகளை காட்ட வல்லவை கண்கள் தாமே! அது நோக்கும் பொழுது சாதாரணமாக பார்ப்பது அல்ல.
அன்பினால் ஆழத்திலிருந்து நோக்குதலாகும் அருள் நிறைந்த அன்பு பார்வை. இயேசு உற்றுநோக்கிய மாத்திரத்தில் விளக்கம் பெற்றார் . சீமோன் இது நயனதீட்சை பெற்றார் என்றும் சொல்லாம். இயேசுவின் கருணை இது. கருணைமிகுதியால் இக்காட்சியைக் காட்டினாலும் அதை காணும் தகுதிஉடையவர்கள் மட்டுமே காணமுடியும். மீண்டும் லூக்காஸ் வரிகளைப் படிப்போம். ஆண்டவர் திரும்பி பேதுருவை உற்று நோக்கவே.. இங்கே திரும்பி (Turned) என்பது நுட்பமான சொல். இயேசு நேராகவோ, விலகியோ செல்லவில்லை. பேதுரு இருக்கும் இடம் நோக்கி திரும்பி பார்க்கின்றார். பேதுரு மனம் திரும்புகின்றார். இவ்விடத்தில் லூக்காஸ் நுண்ணிய பிரித்து காட்டமுடியாத நுணுக்கத்தை தெளிவாக கூறுவதைக் காண்கின்றோம்.
ஒரு தகவலை நாம் அடுத்தவருக்கு தெரிவிப்பதின் நோக்கம் - அத்தகவல் பெற்றவரிடத்தில் அதற்கேற்ற மாற்றம் ஒன்றினை அல்லது விளைவினை அல்லது பதில் ஒன்றினை வாய் மொழியாக அல்லது செயல்முலமாகவே எதிர்பார்ப்பதுதான்.

உயிர்த்தஇயேசு சீமோனிடத்தில் என்னை அன்பு செய்கின்றாயா என்று கேட்டபொழுது ஆம் ஆண்டவரே என்றார். இங்கோ இயேசு கண்ணால் பார்க்கின்றார் ரசவாதம் நிகழ்கிறது.
பேதுரு செயலை பார்ப்போம்.
peter repentedபேதுரு ஆண்டவர் கூறிய வார்த்தையை அவர் நினைவு கூர்ந்து வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
இரண்டாவதாக இயேசுவின் பார்வை மூன்றவதாக அவர் ‘வெளியே போய்’ அதாவது அந்த முற்றத்திலிருந்து காவலர்களிடமிருந்து ஊழியக்காரியிடமிருந்து அந்த சூழ்நிலையிலிருந்தே வெளியே சென்றார்.
இயேசு முதல்முதலில் அழைத்தபொழுது வலைகளை அப்படியே விட்டுவிட்டு வந்ததுபோல் இப்பொழுது இந்த சபித்தஇடத்தை விட்டுவிட்டு வெளியே சென்றார்.
நான்காவதாக அவர் “மனம் வெதும்பி” இங்குதான் மனமாற்றம்; நிகழ்கிறது ரசவாதம் நிகழ்கிறது. தான் கொட்டிய தீச்சொற்கள் அவரை சுட்டது.
ஐந்தாவதாக அவர் “அழுதார்”.
அப்பா வானகத்திற்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.
இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட தகுதியற்றவன் என்று ஊதாரி மகன் கூறிய சொற்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
இயேசு உற்று நோக்கிய கண்கள் அன்பைகாட்டும் - அருளை சொரியும் பேதுரு மனம் திருந்தினார் . விழுந்தவர் எழுந்த விவிலிய நிகழ்ச்சி இது .
இங்கு இன்னென்றையும் கவனிப்போம். இயேசு இதற்கு முன்பும் சீமோனை உற்று பார்த்ததை அருளப்பர் கூறுவார் “இயேசு அவரை உற்றுநோக்கி நீ அருளப்பனின் மகனாகிய சீமோன் கேபா எனப்படுவாய் என்றார். (கேபா எனபதற்கு பேதுரு பாறை என்பது பொருள்) (அரு 1:42) இயேசு முதல் முறை உற்றுநோக்கிய பொழுது பாறையானார்.
இயேசு இரண்டாவதாக உற்றுநோக்கிய பொழுது பவளபாறையானார்.
இயேசுவின் கண்களின் வார்த்தைகளை பேதுரு புரிந்து கொண்டு கண்ணீரால் பதில் கூறினார். பாறையை மோயீசன் தட்டினவுடன் தண்ணீர் வந்தது. இயேசுவின் பார்வைபட்டதும் கண்ணீர் வந்தது.
பேதுரு தன் விதியானது தன்னை எங்கே கொண்டு சேர்க்கப்போகின்றது என்பதை கூட அறியாதவராக இருக்கின்றார். அதன் வழியில் இழுத்த இழுப்பில் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்.
இயேசு முன்கூட்டியே மறுதலிப்பாய் என்று அறிவித்திருந்தும், அவரால் எச்சரிக்கையாய் இருக்க முடியவில்லை - விழுந்தார் எழுந்தார். மனிதன் ஆசாபாசங்களால் எப்போதும் கட்டுண்டவன். அதனால் தன் சீலத்தை இழந்தவன் - இயேசுவின் அன்பால் பாவங்களை கழுவி தன் பழைய பிரகாசத்தை எந்த ஜீவனும் அடைய முடியும் என்பது புரிகின்றது.
நற்செய்தியில் இது மிகச்சிறியதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதுதான் நற்செய்தியின் மையப்பகுதி இந்த நிகழ்ச்சியின் வழியாக நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
- கற்போம்.

அ.அல்போன்ஸ், பெங்களுர்