ST.JOSEPH'S HOSPICE
புனித ஜோசப் ஆதரவற்ற
இறக்கும் தருவாயிலுள்ள
அனாதைகள் கருணை இல்லம்

இறப்பிற்கு முன்னாலான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

mettur gate building

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகாமையில் மேட்டூர் கேட் என்ற இடத்தில் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் கருணை இல்லத்தில் தற்போது 140 பெண்களும், 185 ஆண்களும் ஆக 325 ஆதரவற்ற அனாதை நோயாளிகள் உள்ளனர். ஒரு வாரம் குறைந்த பட்சம் 5 பேர் இங்கு மனித மாண்போடு இறைவனடி செல்கின்றனர்.

Fr.Thomas with guestsஇந்நாள் வரை 1179 நபர்கள் இங்கு இறைவனடி சென்றுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 5 வருடங்களாக ஏறக்குறைய 4200 நபர்கள் குணமடைந்து அவர்கள் விரும்பிய இடங்களுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள என்பது இவ்வில்லத்தின் சேவையை எடுத்துரைக்கிறது.


sjhஒரு நபர் இங்கு அழைத்து வரப்பட்டதும், முதலில் குளிக்க வைத்து அவர்களது முடி, சடைகளை எடுத்து, காயங்கள் பராமரித்து, மருந்தளித்த, மருத்துவ முதலுதவி வழங்கப்படுகிறது. அவர்களது கந்தலான உடைகள் அப்புறப்படுத்தி புதிய உடைகள் அணிவிக்கப்படுகிறார்கள். பின்பு அவர்களுக்கு மூவேளையும் நல்ல தரமான உணவு வழங்கப்பட்டு அழகிய சுற்றுப்புற சூழ்நிலையில் இறக்கும் தருணம் வரை பராமரிக்கப்படுகிறார்கள்.
sjhஒருவர் உயிர் நீத்தார்ரெனில் அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து, உரிய மரியாதைகள் செலுத்தி, மலர் தூவி உடலுக்கு இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இதுவரை மனநலம் பாதிக்கப்பட்ட 75 நபர்கள் மற்ற நபர்களுடன் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர்.

Fr.mattew Fr.thomas

88 வயது அருட்தந்தை மத்தாய் SJ,இ 85 வயது அருட்தந்தை ஆர். ஜார்ஜ் sj.,அரட்தந்தை தாமாஸ்,அரட்தந்தை மார்ட்டின், மற்றும் அருட்சகோதரி. நம்பிக்கை மேரியும் முன்வந்துள்ளனர்.
sjh guests இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை, வருவோரின் மனதை கொள்ளை கொள்ளும். அந்நிறுவனத்தை பார்க்கவும், இங்குள்ள அறைகளில் தங்கிச் செல்லவும், தங்களை அன்போடு அழைக்கின்றோம். உங்கள் வருகையை முன்க்கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறோம்.

இவ்வில்லத்தின் நிறப்பம்சங்கள்:

தங்களைத் தாமே பராமரிக்க இயலாத மிகவும் உடல் நலம் அற்ற, முற்றிலும் அனாதை ஆனவர்களுக்குத் தான் இவ்வில்லம். ஜாதி, மதம், பால், வயது போன்ற வேற்றுமைகள் இங்கில்லை. guest பராமரிப்பதற்கென்று ஒரு மருத்துவர் இரு வாரத்திற்கு ஒருமுறை வருகிறார். அதோடு மனித நேயமும் சகிப்புதன்மையும் அதிகம் பெற்றுள்ள பல செவிலியர்களும் 24 மணி நேரமும் இங்கு பணியாற்றுகின்றனர். வீணாகும் பொருட்கள் அனைத்தம் மறு சூழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எந்த அரசு உதவியும் இன்றி பொதுமக்கள் நன்கொடையால், மட்டுமே இவ்வில்லம் இயங்கி வருகிறது.

500 நபர்கள் உள்ள இரண்டாவது கருணை இல்லம் செங்கல்பட்டில் அமைத்து வருவதால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். தங்களைப் போன்ற நல் உள்ளங்களின் உதவியை எதிர்நோக்கி உள்ளோம்.

Paleswaram home

காலை உணவிற்கு ரூ 4000/- மதிய உணவிற்கு ரூ 8000/- இரவு உணவிற்கு ரூ 3000/- மற்றம் மருத்துவ வசதிகக்கு நாள் ஒன்றுக்கு ரூ 2000/- தேவைப்படுகிறது. (Receipt with 80G Income Tax Exemption)
பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ வைபவங்களின் போது, ஆதரவற்றோரையும் மனதில் கொண்டு எங்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

map tp paleswaram Home


PLEASE SEND
DD or cheque in favour of: "DIRECTOR ST.JOSEPH'S HOSPICE"
BANK DETAILS:
A/c No 0457053000005812  IFSC: SIBL0000457
SOUTH INDIAN BANK, CHENGELPET

அனுப்ப வேண்டிய முகவரி
ST.JOESPH'S HOSPICE
METTER GATE P.O.,
KODAI ROAD(VIA)
DINDIGUL DISTRICT
TAMILNADU-624206
Tel: 04543-238686
MOBILE: 93603 76678/94420 30354/90472 30831    
guest at home
ST. JOESPH HOSPICE
PALESWARAM VILLAGE
SALAVAKKAM(VIA)
KANCHEEPURAM Dt.
PINCODE 603 107
Tel: 044-27290781/27291061
MOBILE 93603 76678

 மேலும் விபரங்களுக்கு :
அருட்தந்தை R.V. தாமஸ்
நிறுவனர் இயக்குனர்
புனித ஜோசப் கருணை இல்லம்
 Fr. Thomas -Founder&Director
மின் அஞ்சல்: fatherthamas1950@yahoo.com
website: www.lightfortheblind.org.uk  



sunday homily



A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com