மீட்புப் பணிக்கு அர்ப்பணித்தார்

அருட்தந்தை இலா கபிரி .சே.ச.

இயேசு பிறப்பு முடிந்தது. பணி தொடங்கியது. குடில்கள் கலைக்கப்பட்டன. கொடிகள் அவிழ்க்கப்பட்டன. இறைக்காட்சித் திருவிழாவின் வானகவிண்மீன்கள் அணைந்தன. அரசர்களும் ஞானிகளும் வீடு திரும்பினர்.

இயேசு தம்மை உணர்ந்தார்.

நீங்கள் ஏன் என்னைக் தேடுனீர்கள். நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பத உங்களுக்குத் தெரியாதா?
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவலர்களுக்குப் பணிந்து நடந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக்கா 2:52)

பாவிகள் மத்தியில் தம்மை வைத்தார்

பாவி மன்னிப்பு அடைய "மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்னும் குரல் வனாந்திருந்து எழுந்தது. மக்களெல்லாம் யோவானிடம் திருமுழக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்கு பெற்றார்.

திருக்குடும்பம் திருத்துவக் குடும்பம்

இயேசு திருக்குடும்பமாக வாழ்ந்தார். திருத்துவக் குடும்பமாக மாறினார்.
இயேசுதிருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றவுடன் தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோல தம்மீது வருவதைஞம் கண்டார். அப்பொழுது "என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஏகமாய் கேட்டது (மத்தேயு 3:16-17)

இயேசுவின் அர்ப்பணத்திற்கு எதிரான சோதனை

இயேசு கல்லை அப்பமாக்கவில்லை. இறைவனை சோதிக்கவில்லை. எல்லாவற்றிலும் சரணாகதியில் இறைசித்தத்திற்கு தம்மை கையளித்தார்.

இயேசு தம் பணியை தெரிந்து கொண்டார்

எசாயாவின் இறைவாக்கு தம்மில் நிறைவேறுவதை இயேசு கண்டார், "ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது. எனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார், ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைபட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றறோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.(லூக்கா 4:18,19)
தம் பணியைத் தெரிந்து கொண்ட இயேசுவின் முடிவில் தம் முத்திரையைப் பதித்தார் ஆவியானவர்.

இயேசுவும் சீடர்களும்

இயேசுவின் பின்னால் சீடரும் செல்லுகிறார். திரும்பிப் பார்க்காமல் செல்லுகிறார். நிபந்தனையில்லாத அழைப்பிற்கு சீடர்கள் நிபந்தனையில்லாமல் பதிலுரைத்திருக்க வேண்டும். இயேசு எங்கு செல்லுகிறாரே, அங்கே சீடர்களும் செல்லுகிறார், சீடர்களும் அழைத்தலும், ஆவியின் அருளும் பெற்று ஆண்டவருடைய வார்த்தையைப் போதித்தும், புதுமைகள் செய்தும் இயேசுவைத் தொடர்ந்தார்கள்.

இறைத்தந்தை இரண்டாம் முறை

தாபோர் மலையில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார், ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று "இவரே என் மைந்தர். நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. (லூக்கா 9:28-36)
இயேசு திருத்வக் குடும்பத்தின் திருமுழுக்கால் தம் பணியை அறிந்து அதற்குத் தம்மை அர்ப்பணிக்கிறார். மலையில் மறுரூபமாகி அதே திருத்துவக் குடும்பத்தால் சிலுவை நாயகனாகி இரத்தத்தாலும் ஆவியாலும் திருமுழுக்குப் பெறுகிறார்.
நமது வாழ்வும் பணியும் சிலுவைப்பலியும் எல்லாம் ஆவியானவரால் தான். எனவே நாம் பாடுவோம்.
இயேசுவாக மாற வேண்டும்
மாற்றும் எம்மை மாற்றும் -தூய ஆவியே எம்மை மாற்றும்.

நன்றி அருள்வாழ்வு -பெப்ரவரி2014