ஏன் செபிக்க வேண்டும்?

ஏன் செபிக்க வேண்டும்?செபம் கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு உண்மையென்பதற்கு அடையாளமாயிருக்கிறது. எனவே நாம் செபிக்க சேண்டும்.

செபம் கடவுளோடு நாம் பேசுகின்ற அனுபவமே. பேச்சு வார்த்தை இருக்கின்ற இடத்தில் தான் உண்மையான ஒற்றுமை வளரும். எனவே நாம் செபிக்க வேண்டும்.

செபத்தின் மூலம் நம்முடைய தேவைகளை கடவுளிடம் தெரிவிக்க முடிகிறது. நம்மால் முடியாதது அவரால் முடியும். எனவே நாம் செபிக்க வேண்டும்.

செபம் நம்மை கடவுளோடு இணைக்கின்ற பாலமாக இருப்பதால் அவரால் நாம் பரிசுத்தமடைக்கின்றோம். எனவே பாவங்கள் நீங்கி பரிசுத்தமாகிட நாம் செபிக்க வேண்டும்.

செபத்தின் மூலம் நம்முடைய மனதிலுள்ள பாரங்களையெல்லாம் கடவுளின் பாதத்தில் வைக்க முடிகிறது. அதன் விளைவாக மனதிலிருந்து பாரங்கள் இறங்கி இளைப்பாறுதல் ஏற்படுகிறது. எனவே நாம் செபிக்க வேண்டும்.

why  should we pray? கடவுளுடைய உடனிருப்பை நாம் உணருவதின் மூலம் தான் அவருடைய சமாதானம் நமக்குள் வரும். எனவே நாம் செபிக்க வேண்டும்.

கடவுளிடமிருந்து பரிசுத்தமாக வாழும் வல்லமையை செபத்தின் வழியாகவே நமக்குள் பெற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் செபிக்க வேண்டும்.

தேவ ஆலோகனைளையும் வழி நடத்துதல்களையும் கடவுளின் சமுகத்தில் காத்திருந்து செபிப்பதின் வாயிலாகவே பெறுகின்றோம். எனவே நாம் செபிக்க வேண்டும்.

செபத்திலே நாம் ஆண்டவருக்கு நம்மை காண்பித்துக் கொண்டேயிருந்தால் செயல்களில் அவரின் வல்லமையை நம் வாழ்வில் தினமும் அனுபவிக்கலாம். எனவே நாம் செபிக்க வேண்டும்.


நன்றி: ஜீவநீரோடை 11.2014

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்