புனித வாரம்

பெரிய வியாழன்

கிறிஸ்தவ மக்கள் இந்த வாரத்தை புனித வாரமாக கொண்டாடுகின்றனர். அதிலும் சிறப்பாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களை சிறப்பான நாட்களாகக் கருதிக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் ஆண்டவராகவும், அரசராகவும், மீட்பராகவும் போற்றி வணங்கும் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முப்பெரும் நிகழ்ச்சிகளை இந்த மூன்று நாட்களும் நினைவுக்கூறுகின்றனர்.

இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர். இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார். தன் மரணத்திற்குபின் தன்னை மறந்துவிடாதவண்ணம் அந்த விருந்தாடலையே தன் நினைவாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணிக்கிறார். பசியால்வாடுவோருக்கு இறைவன் தோன்றினால் உணவாகத்தான் தோன்றவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்ன வாக்கை மெய்ப்பிப்பதைப்போல் உள்ளது. அதோடு நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையாக பிரப்பிக்கிறார். இங்கு தான்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவர் எப்படி அன்பு செய்தார் என்று பார்க்கும்போது, இந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே அதனை தெளிவுப்படுத்துகிறது.

washing the feet அந்த பந்தியிலிருந்து எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற உறவில் நிலைக்கொள்ளும் ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபது கூட்டல் முப்பது மொத்தம் தொன்னூறு நாட்களோடு மங்கிப்போகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. பணிவிடைச் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?

பெரிய வெள்ளி

இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நாள்! இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி, நல்ல வெள்ளி, புழழன குசயைனயல என்று அழைக்கப்படுகிறது. சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது. அதுவும், அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு, அவரது அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு, கலகக்காரனாக ஜோடிக்கப்பட்டு, நீதி துறையை வளையவைத்து, மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் செய்தக் கொலை. இந்த சாவு நிகழ்ந்த நாளைத்தான் ‘நல்ல வெள்ளி’ என்கின்றனர் கிறிஸ்தவர்கள். அந்த நாளில் அவருக்கு நடந்த ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டால் நல்லது என்று எதுவும் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே, நல்ல வெள்ளி என்று சொல்வது சற்றும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கும்.

way of crossநமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நமக்கு நடக்கின்றவைகளைக் கொண்டுமட்டுமே நமது நாட்களை நல்லது கெட்டது என்று பிரிப்போமென்றால் நல்லவைமீது நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தை கேள்வி குறியாக்குவோம். இயேசு கொலை செய்யப்பட்ட நாளை நல்லதாக மாற்றியது என்ன? அல்லது, அவர் தான் கொல்லப்பட்ட நாளை நல்லதாக ஆக்க என்ன செய்தார்?

முதன்முதலில் அவர்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் அவர் எதிர்பாராத ஒன்றல்ல. அவர் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்து சாவதே என்றாலும் தன் பணியிலிருந்து விலகுவதில்லை என்று நீடித்து நிலைதிருந்தது இந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்கிற்று.

வியர்வை இரத்தமாக கொட்டுமளவுக்கு அவர் கலக்கமுற்று இந்த துன்பக் கலம் தன்னைவிட்டு அகலாதா என்று மன்றாடினாலும், அவர் வெறுப்புணர்ச்சியும், கசப்பு உணர்வும் தன்னை மேற்கொள்ள விடவில்லை. அவரது சாவு சம்பவத்தில் உடல் வலி, மன வேதனை இருந்தன, ஆனால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போகவில்லை. அப்படி என்றால் அவர் சிரித்துக்கொண்டு பாடுகளை அனுபவித்தார் என்று சொல்வதன்று. பல சமயங்களில் சிரிப்பொலிக்குப்பின்னும், கொண்டாட்டகங்களுக்குபின்னும் சொல்லில்வராத சோகங்கள் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம். வேதனை எப்போதும் சோகத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதல்ல. கடின உழைப்பில் அடங்கியிருக்கும் வேதனை வெற்றிப்பெற கொடுக்கும் விலை என்றிருக்கும்போது மகிழ்ச்சித்தான் மிஞ்சும் அன்றோ! இயேசுவைப்பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல், இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும். இவ்வாறு இந்த சோகம் நிறைந்த வெள்ளியை அவர் நல்ல வெள்ளியாக மாற்றினார்.

அவருக்கு அன்று இழைக்கப்பட்ட வேதனையும், அவமானமும் அதிகாரவர்க்கத்தினரால் பலநாட்களாக வெகு நுணுக்கமாக திட்டம்தீட்டி, வேண்டுமென்றே தன்மேல் திணிக்கப்பட்டவை என்று அவர் நன்கு அறிந்திருந்தார். இருப்;பினும், அதனை நம்ப விரும்பாமல் அவர் தனது துயரத்தின் உச்சக்கட்டதில், விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே மூன்று ஆணிகளால் பிணைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தன்னை வதைத்தவர்களுக்காக, “பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்’ என்று மன்றாடி கோபமும் கசப்பும் நிறைந்த அந்த சூழலில் அன்பை பொழிந்து உலக வரலாற்றில் ஒரு அன்பு புரட்ச்சிக்கு வித்திட்டார். இதனால், அந்த அக்கிரமம் நிறைந்த வெள்ளி நல்ல வெள்ளியாயிற்று.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோரின் மொழியின்படி நமது வாழ்வையும் அதில் உள்ளவைகளையும் நிகழ்பவைகளையும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குவது நம்மைத் தவிர வேரொன்றுமில்லை என்று கற்றுக் கொள்வோமா?.

பெரிய சனி

கிறிஸ்தவ மக்கள் நேற்றய தினத்தை பெரிய வெள்ளியாக கொண்டடினர். புனித சனி என்ற இன்று அவர்கள் மரித்த இயேசுவின் உயிர்ப்புக்காக காத்திருப்பர்.

இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்தவே தன்னுயிர் துறந்து சிலுவையில் மரித்தார். happy easter ஒரு கவிஞன் தன் கற்பணையில் எழுந்த ஒரு காட்சியை இப்படி எழுதுகிறார்: இறைவனிடததில், ‘நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று கேட்டேன். அவர் இரண்டு கைகளையும் அகல விரித்து, ‘இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று காட்டி சிலுவையில் கைகளை விரித்து மரித்தார்.’ தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன்பே தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்த முற்பட்டார். அந்த விருந்தாடலையே தன் நினைவுச் சின்னமாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணித்தார். இதனையே இன்றும் கிறிஸ்த்தவர்கள் நற்கருணைப் பலியாக கொண்டாடிவருகின்றனர்.

அதோடு அவர் நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையைப் பிரப்பிக்கிறார். இவ்வாறு தன்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவருடைய அன்பு எத்தன்மையினாதாக இருந்தது? அந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே நமக்கு அதனை தெளிவுப்படுத்துகிறது. அந்த பந்தியிலிருந்து அவர் எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சூழலில் மலரும்; ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபதோ முப்பதோ நாட்களோடு மங்கிப்போவிடுவன என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படவேண்டிய ஒன்று. பணிவிடைப் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?


அருட்திரு தந்தை திவாகர் க.ச.