நற்செய்தி ஒரு புதியபார்வை

அ.அல்போன்ஸ்-பெங்களுர்

adam&eveஏதோன் தோட்டத்தில்… கடவுள் முன்னிலையில் கனியை உண்ட ஆதாம் ஏவாள் … அதற்குக் காரணமாயிருந்த பாம்பு… கடவுள் பாம்பிடம் கூறுவார் “உனக்கும் ஸ்திரிக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.” இங்கேதான் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் யுத்தம் தொடங்குகிறது. போராட்டத்தின் வித்து விழுகின்றது. இயேசு இங்குப் பூமியில் வரும் பொழுதுச் சாத்தானின் சோதனைகளோடுதான் புதிய ஏற்பாடு தொடங்குகிறது, அது கல்வாரி சிலுவை மரணத்திலும் தொடர்கிறது. விவிலியம் முழுவதும். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும். இருளுக்கும் ஒளிக்கும் எழுந்த போராட்டமா? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். விவிலியத்தில் காணுகின்ற காட்சிகள் நடைபெறும் சம்பவங்கள் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எழுந்த போராட்டம் என்று ஒதுக்கிவிட முடியாது நற்செய்திகளின் உள்ளே சிறிது ஆழமாகப் போனால் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே போராட்டமாக உள்ளது. ஒருவகையில் தர்மத்தின்படி செயல் பட்டு இன்னொரு விதத்தில் தர்மத்தைத் தவறினால்…….இந்தப் போராட்டமே கிட்டதட்ட விவிலியம் முழுக்கத் தென்படுகிறது. எளிதாகத் தோன்றும் தர்மம் அதைக் காப்பாற்றி நடக்கும்பொழுது சிக்கலாகிவிடுகிறது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான தர்மங்கள். அதை எல்லாம் எதிர் நோக்கியப் பொழுது எதைப் பின் பற்றுவது என்ற குழப்பங்கள் எழுகிறது. அந்தக் குழப்பங்களாலும் அதில் நம்மை எவ்வாறு விடுவித்துக் கொள்வது, எதைத் தேர்தெடுப்பது என்ற வழிமுறைகளைச் சொல்லிதருவது நற்செய்தி..

தனித்தன்மை மிக்க ஒவ்வொருவரும் ஒரு திருப்புமுனையில் தங்கள் முடிவுகளை எடுப்பதை நாம் காண்கின்றேம். நற்செய்திக் காட்டும் தர்மத்தின் சிக்கல்களை முழுவதும் அறிந்தவனாக நாம் சொல்ல முடியாவிட்டாலும் அறிந்ததைச் சொல்லாமல்லவா ... அப்படிச் சில நிகழ்வுகள் … ஆம் அது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே இடையே எழுந்த போராட்டங்கள்…

Mary and angel மரியாளைப் பார்ப்போம் இவள் மணஒப்பந்தமானவள் வானதூதர் மரியாளிடம் கடவுளின் அருளால் “நீ ஒரு குமாரனைப் பெறுவாய்” என்றபொழுது மண ஒப்பந்தமான மரபுவழியைத் தேர்தெடுப்பதா அல்லது மறையுண்மை உரைக்கும் தூதரின் மொழியான ஆண்டவரின் விருப்பத்தை ஏற்பதா? இங்கே தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே சங்கடம் வருகிறது. ஆயினும் மரியாள் மறையுண்மையை இறைவிருப்பத்தை ஏற்கின்றாள். அந்த முடிவால் மனிதகுலம் மீட்கபடுகிறது. இதை லூக்காஸின் நற்செய்திக் கூறுகின்றது.

மரியாளின் கணவனான யோசேப்பைப் பார்ப்போம். கன்னிமரியாள் கருதாங்கியிருப்பதாகத் தெரிந்தது. அவளை விலக்கிவிடுவதா? ஏற்றுகொள்வதா என்ற சிக்கல் வரும் பொழுதுக் கனவினில் தூதரின் மொழி கேட்டுச் சூசை உடனே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்

ஆலயத்தில் சக்கரியாஸிடம் "உன் மனைவி மகனைப் பெறுவாள்" என்றபொழுது வயதான நிலையில் இருந்த அவரால் அந்த உண்மையை ஏற்க முடியவில்லை அதன் பயனாக ஊமையானவர் பின்னர் மகன் பிறந்தபொழுது அவனுக்குப் பெயரிட வாய்திறந்தார்.

Peter repented பேதுருவிடம் செல்வோம். "உம்மோடு இறக்கவேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்று இயேசுவிடம் இரவு உணவின் பொழுதுக் கூறியவர் இவர். இயேசு பேதுருவின் பாதங்களைக் கழுவியவர். கால்களின் ஈரம் காய்வதற்குள் சோதனை வருகின்றது. ஊழியக்காரி ஒருவள் பேதுருவிடம் "இயேசுவோடு நீ இருந்தாய்" என்று கூறியவளிடம் அவள் கூறியதை ஏற்பதா அல்லது மறுப்பதா? என்ற நிலையில் இரண்டு முறை "தெரியாது தெரியாது" என்றார். இயேசுவை முன்றவது முறைச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். கோழிக் கூவியல்லவா அவர் வாயை ழூடியது. தன்னைப் புறக்கணிக்கப் படுவதற்காகவே அரவணக்கப்பட்ட பாத்திரமல்லவா பேதுரு. அநியாயம் செய்து ஒரு நியாயத்தைக் கொன்றுவிட்டார்.

Jesus இயேசுவிடம் செல்வோம்.
இயேசு கூறுவார் “என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே வந்தேன்” (யோவான் 6:39) "நானும் தந்தையும் ஒன்று" என்று கூறியவர் ஜெத்சமனித் தோட்டத்தில் கலக்கம் அடைகின்றார் தந்தையின் விருப்பத்தை ஏற்பதா? விலகுவதா? "கூடுமானல் இந்தப் பாத்திரம் என்னை விட்டு விலகட்டும்" என்று ஒருமுறையல்ல இருமுறையல்ல முன்றுமுறை கூறுகின்றார். இரத்தவேர்வை வேர்க்கின்றார். முடிவில் தனக்கு நிகழபோவதை எண்ணித் தானே முன் சென்று தன்னைப் பிடிக்கவருபவர்களிடம் செல்கின்றார். தந்தையின் விருப்பத்தை ஏற்கின்றார்.தந்தையின் விருப்பத்தை ஏற்கின்றார்.

யூதாஸைப் பார்ப்போம் இவனும் இயேசுவேடு இரவு உணவில் கலந்துகொண்டவன். வேடிக்கை என்னவென்றால் யூதாஸின் வாய் ஒருபக்கம் அப்பத்தை உண்டு அன்பைப் பேசிக்கொண்டே இருந்தது. அவனது கைகளோ இன்னொருபக்கம் காட்டிக் கொடுப்பதற்காக வெள்ளிகாசுகளை எண்ணிக்கொண்டேயிருந்தது. முடிவில் தனக்கு வந்த சிக்கலில் மாட்டிக்கொண்டான். இயேசுவைக் காட்டிக்கொடுத்துவிட்டான்.

பிலாத்துவைப் பார்ப்போம் யூதசங்கம் இரத்தகறையோடு இயேசுவை நிறுத்தினார்கள் பிலாத்துவின் முன்பு. இயேசுவைக் கையளித்தது பொறமையில்தான் என்று அறிந்திருந்தான் (மத் 27:19). இயேசுவிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை என்று கூறினான். இயேசுவை விடுவிப்பதா அல்லது தண்டிப்பதா என்ற போராட்டத்தில்…….. பிலாத்துவின் வீரம் அருகில் இருந்தது. ஆனால் நீதித் தூரம் போய்விட்டது. குற்றம் ஒன்றும் இல்லை என்று தண்டனைக் கொடுத்தான். நீதி தராசின் முள்ளே நெஞ்சில் குத்திய கதை இது.

பிலாத்து முள் செடிகளின் நடுவே விழுந்த விதை. கழுத்தில் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் விழுந்தவன். இவன் தீர்ப்பு…

crucifictionவிவிலியப் பக்கங்களில் இன்னமும் இரத்தத்தோடு துடிக்கும் ஒரு இதயத்தின் உண்மைக் கதை. நல்லகள்ளனைச் சிலுவையில் பார்க்கிறோம். யூதர்களுடனும் மற்றெருக் கள்ளனுடனும் சேர்ந்து இயேசுவைக் கேலிபேசும் திருடனாக நின்றவன் நியாயம்பற்றிப் பேசி, இறுதியில் ஞானம் பேசும் மானிடனாகி பின் இயேசுவுடன் வானகம் போகின்றவனை வியப்புடன் பார்க்கின்றோம். நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு. நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு என்பது சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. என் நியாயம் என் தரப்பு என்னும் தனிமனிதச் சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. இது பேதுருக்கும் யூதாசுக்கும் பொருந்தும். படிக்கிற அனைவரும் பதைப் பதைக்கும் அளவில் மறுதலிக்கும் பேதுரு மேலும் காட்டிக் கொடுக்கும் யூதாஸின் மேல் கோபம் வருகிறது. நமக்காக இறக்கும் இயேசுவின் மீது இரக்கம் வருகிறது. இது விவிலியத்திற்குக் கிடைத்த வெற்றி.

தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே ஏற்படும் போரட்டங்கள் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமே இடையே எழும் சோதனைகள் எல்லாம் தண்டனைகள் அல்ல. மாறாக விண்ணகம் வழிக் காட்டும் படிகட்டுகள். இதை இறையியலை வைத்தான், மறை உண்மையைத்தான் மேலே கண்ட விவிலிய மனிதர்கள் வழியாக உணர்த்தி விடுகின்றன். அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒருபாடமாக நமக்குப் போதிக்கின்றன.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது