"மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று."
இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.மாற்கு 5:34
இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுகைக்கூடத் தலைவனின் மகளை குணப்படுத்த சென்று கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் நெருக்கியது. அந்த கூட்டத்தில் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே எனது பெரும்பாடு குணமாகும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு அங்கே ஒரு பெண் அந்த கூட்டத்தினுள் புகுந்து இயேசுவின் ஆடை விளிம்பைத் தொட்டாள். தொட்ட மாத்திரத்திலேயே குணம் பெற்றாள். இறைமகனிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்த ஆண்டவர் என் ஆடையை தொட்டவர் யாரென்று கேட்க, அப்பெண் நடந்ததை கூறினாள். இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் நான் கண்டிப்பாக குணமடைவேன் என்ற அவளது நம்பிக்கையை இயேசு "மகளே உனது நம்பிக்கை உன்னை குணமாக்கியது. நீ நலமாக வாழ்" என்று ஆசீர் வழங்குகின்றார்.
ஆம் நண்பர்களே! நாமும் இறையாட்சி பணியை நம்மால் செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை நம்மில் ஏற்றுக் கொண்டு இறைமகனின் உடனிருப்போடு எந்த பணியையும் செய்வோமாகில் நிச்சியம் வெற்றியடைவோம். சிறந்த இறையரசை இந்த மண்ணகம் காணும் என்ற நம்பிக்கையில் திருச்சபை தலைவர்கள் முதல் பொதுநிலையினர் வரை நம்பிக்கையோடு பணியாற்றிட இன்றைய நற்செய்தி அழைப்புவிடுக்கின்றது.
அன்பு இயேசுவே! உம்மால் கூடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை என்னில் வளர்ந்திட வரம் தாரும்.ஆமென்