இன்றைய நற்செய்தி

மாற்கு 5:1-20

அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருந்தார்.

அருள்மொழி :

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். மாற்கு 5:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பல்லாயிரம் பேய் பிடித்திருந்த மனிதனை கண்டார். இயேசுவே முன்பே உணர்ந்திருந்து அந்த பேய் கூட்டத்தை கண்டித்திருந்தார். அந்த பேய்கள் பன்றிகளுக்குள் புகுந்து விடுகின்றோம் என்று இயேசுவிடம் அனுமதி பெற்று ஏறத்தாழ இரண்டாயிரம் பன்றிகளுக்குள் புகுந்தன. அவை யாவும் கடலுக்குள் கூக்குரலிட்டு விழுந்து மடிந்தன. இதன் பிறகு பேய்பிடித்திருந்த இலகியோன் அறிவு தெளிந்து ஆடையணிந்து அமர்ந்திருந்ததை ஊர்மக்கள் கண்டு அச்சமுற்றனர்.

நண்பர்களே! நாமும் இறைமகனின் மீட்புப்பணியில் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டுமானால் நமக்கு தேவையான ஆற்றலை இறைமகன் வழங்குவார். குறிப்பாக இங்கே பன்றிகூட்டத்தில் பேய்கள் புகுந்ததால் பன்றி இறைச்சியை நாம் புசிக்கலாகாது என்பதை உணர்ந்திடுவோம். இறைமகன் எந்த அதிகாரத்தோடு வலம் வந்தாரென்றால் இந்த பன்றிகூட்டமே நடுநடுங்கி சென்று சாகும் அளவு இயேசுவின் ஆற்றல் மேலோங்கி நின்றது. இந்த இறைபணி ஆற்றிட இறைமகனின் துணையோடு நாம் ஒருங்கிணைந்த விசுவாசத்தில் நாளும் வாழ்ந்து இறைத்திட்டத்தில் பங்கேற்பாளர்களாக மாறிடுவோம்.

சுயஆய்வு :

  1. இலகியோன் முன்னைய நிலையை அறிகிறேனா?
  2. பேய் கூட்டம் பன்றிகளுக்குள் புகுந்த பிறகு இலகியோன் நிலை என்ன என்பதை அறிகிறேனா ?

இறைவேண்டல்:

அன்பு இயேசு! உம்மில் ஆழ்ந்த அசைக்க முடியதா விசுவாசத்தை பெற்று வாழும் வரம் தாரும். ஆமென்