இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:21-28

இயேசு தீயஆவியை அதட்டினார்.

அருள்மொழி :

"வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். மாற்கு 1:25

வார்த்தைவாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தீயஆவி பிடித்தவரை குணப்படுத்துகின்றார். தொழுகைக்கூடத்தில் கற்பித்து கொண்டிருக்கம் போது அந்த கூட்டத்தில் தீயஆவி பிடித்த ஒருவன் இருந்தான். அவனுக்கு இருந்த தீயஆவி நசரேத்தூர் இயேசு தான் அவர் என்பதை உணர்ந்து இவருக்கு முன்பு நாம் நிற்க முடியாது என்பதை உணர்ந்து "இறைமகனையே உமக்கு என்ன வேலை?" என்று கேட்க தொடங்கியது. அப்போது இறைமகன் "வாயை மூடு வெளியே போ இவரை விட்டு அகன்று போ" என்று அதிகாரத்தோடு விரட்டினார். உடனே அந்த தீயஆவி அவரை விட்டு வெளியேறியது. இந்த சாட்சியை கண்டவர்கள் தீயஆவியும் இவருக்கு அடிபடிகின்றனவே! என்று வியப்பில் ஆழ்ந்தனர். இங்கே இயேசு அதிகாரத்தோடு போதிக்கின்றார். இறையாற்றல் வெளிபடுகின்றது. தந்தை மகனில் ஒளிர்கின்றார் என்பதை நன்கு உணர்ந்திடுவோம்.

நண்பர்களே! நாமும் இறையச்சம், இறைஆற்றல் கொண்டு பணியாற்றிட என்றும் இறைபிரசன்னத்தில் ஊன்றிட இறைவார்த்தையை சுவைப்போம்!. இறைவனில் நாம் சங்கமிக்கும்போது இதே ஆற்றலோடும் அதிகாரத்தோடு போதிக்கும் வரம் தூய ஆவியார் நாம் எங்கு, எப்போது தம் மக்களுக்கு வெளிபடுத்த வேண்டுமோ அந்த ஆற்றலை தூயவர் வழியாக செயல் புரிவார் என்பது திண்ணம்.

சுயஆய்வு:
  1. தீயஆவியை அதட்டினார் எப்படி என்பதை உணர்கின்றேனா?
  2. வாயை மூடு வெளியே போ என்ற அதிகாரம் உணர்த்தும் செய்தி யாது?
இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நான் என்றும் உமது பலம் பெற்று உம் பணியாற்ற வரம் தாரும்.ஆமென்