அறுவடைகாலம் வந்துவிட்டது
அருள்மொழி :"பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று கூறினார். மாற்கு 4:29
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு, உவமைகள் வாயிலாக பேசுகின்றார். முளைத்து தானாக வளரும் விதை எவ்வாறு வளர்ந்து, தளிர், பின்பு கதிர் நிறைய தானியம் தாங்கி வருகின்றதோ அவ்வாறு இறைவார்த்தை எனும் விதை, அதாவது நற்செய்தி அதன் வளத்திற்கேற்ப மண்ணில் புதைவது போல் நல்மாந்தர் உள்ளங்களில் ஊன்றபட்டால் அது தானாக வளர்ந்து தன்னை சுற்றியிருப்பவரையும் இறைவார்த்தையின் ஒளியில் வளர்ச்செய்து அனைவரையும் நன்கு தரமான மானிடராக வளரச் செய்யும். அப்போது உரிமையாளாரான தந்தை இறுதி நாளில் அறுவடைக்கு செல்லும் போது பெருமகிழ்ச்சியோடு தன் ஆடுகளை இனம் கண்டு இறையரசில் சேர்த்திடுவார். இத்தகைய மனநிலையை கொண்ட மானிடராக நாம் வாழவே இந்த உவமை நமக்கு சான்றுபகர்கின்றது. இதன் ஒளியில் உலக மாந்தர் வாழ்வார்களேயாகில் இந்த மண்ணகம் இறையரசை கூடிய விரைவில் காணும் என்பதை இங்கே உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
அன்பர்களே! நாமும் நற்கனி தரும் மரமாக மாறிட இறைவார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நாமும் மறைநூலைப் படிப்போம். நற்செய்தியாளராக மாறி சமுதாயத்தை சீர்த்தூக்கி பார்க்க நமக்கு இறைமகன் இந்த உவமையின் வாயிலாக அழைப்பு விடுக்கின்றார்.
சுயஆய்வு :அன்பு இயேசுவே! அறுவடை காலம் நெருங்கு விளை நிலமாக நான் மாறிட வரம் தாரும் ஆமென்..