இன்றைய நற்செய்தி:

லூக்கா 10:1-9

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

அருள்மொழி:

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது; "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். லூக்கா 10:2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் அன்று தம் சீடர்களை இருவர் இருவராக தன் நற்செய்தி பணிக்காக அனுப்புகின்றார். இன்றும் பலகோடிக்கணக்கான மக்களை கொண்ட இந்த திருச்சபையில் அறுவடையோ மிகுதி வேலையாட்களோ மிகவும் குறைவாக தான் இருக்கின்றோம். நமக்கும் இந்த அழைப்பை முன் வைக்கின்றார். அன்றைய சூழலிலும் ஆதிக்கம் தான் தலை நிமிர்ந்து நின்று மக்களை அதிலும் அறியாமை வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் அவதியுறும் நிலை இருப்பதால் நமக்கும் இயேசு அழைப்பு விடுக்கின்றார். பொதுநிலையினராகவோ தேவஅழைப்பு பெற்றவராகவோ சமுதாயத்தில் பணி ஆற்ற அறுவடையின் உரிமையாளராம் தந்தையிடம் மன்றாடும்படி நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாமும் மன்றாடுவோம். நம்மிடையே வேலையாட்களை உருவாக்கி சமத்துவ சமுதாயம் காண முற்படுவோம். இறைவார்த்தையின் ஒளியில் நாம் நற்செய்தியாய் வளர்ந்திட, வாழ்ந்திட இறைமகன் நமக்கு உணர்த்தும் செய்தியினை உள்வாங்கி வாழ்ந்திடுவோம் வாரீர்.

சுயஆய்வு:
  1. அறுவடையோ மிகுதி என்பதின் பொருளை உணர்கின்றேனா?
  2. வேலையாட்களே குறைவு என்பதின் பொருள் உணர்த்தும் செய்தி யாது?
இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! தந்தையின் விருப்பப்படி உம் அறுவடைக்கு தேவையான ஆளாக நான் மாறிட வரம் தாரும். ஆமென்.