படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அருள்மொழி :" இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்." என்றார் மாற்கு 16:15
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் பிறப்பு-போதனைகள், படிப்பினைகள் பாடுகள்-இறப்பு- உயிர்ப்பு அனைத்தும் படைப்பின் சிகரமான மானிடருக்காக தான் என்பதை எடுத்துரைக்கின்றார். அவரோடு இருந்து தூய ஆவியாரின் ஆற்றலை பெற்றுக் கொண்ட நாம் இறைமக்கள் ஆவோம்.. நமது மீட்புக்காக பல இன்னல்கள் பட்டார். அவரே என் அன்பார்ந்த மகன் என்று தந்தையின் குரல் ஒலி அவர் மீது இறங்கி தூய ஆவியார் முற்றிலுமாக அவர் வழியாக உலகை ஆட்சி செய்கின்றார். அவரது ஆட்சிக்க முடிவே இராது என்ற கபிரியேலின் வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறியது. அதன்படி நாம் அனைவரும் இறைத்திட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். நாம் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவின் மறையுடலாக உள்ளோம். நமது செயல்கள் அனைத்தம் இறைமகனில் நிறைவு பெறும் என்பதை மனதில் பதிவு செய்வோம். மனம் திருந்தி திக்கெட்டும் சென்று நற்செய்தியை பறைச் சாற்றுவோம். இறைமகனில் நாம் சங்கமித்து இறைஏவதலை பெற்றுவர்களாய் இந்த இகமதில் வலம் வருவோம். இந்த கூற்றை நம்பி இறையரசின் கூறுகளாக நாம் மாறுவோம். புதிய வையகம், புதிய வானம் என்ற வரிகளை வாழ்வாக்கிடுவோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நம்மை முன்னிருத்துகின்றது.
சுயஆய்வு :அன்பு இயேசுவே! உமது மீட்பு திட்டத்தின் கூறுகளை படைப்பிற்கெல்லாம் போதிக்கும் வரம் தாரும். ஆமென்.