"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"
அருள்மொழி :"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். மாற்கு 3:35
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு,இறைமகன் தந்தையின் திருவுளத்தை நிறைவு செய்யவே இந்த மண்ணுலகம் வந்தார். இங்கே அன்னைமரியாளும், சகோதரர்களும் வந்திருப்பதை சுட்டி காடடியவர்களுக்கு உண்மையான உறவு என்னவென்பதை சுட்டிகாட்டுகின்றார். இங்கே பிரிவினை சகோதரர்கள் உட்பொருளை உணருமுடியாத நிலையில் இயேசுவே தாயாக ஏற்று கொள்ளாத போது நாம் ஏன் மரியாவை ஏற்றுக் கொள்வது என்ற தப்பறையான போதனைகளை உருவாக்கிவிட்டார்கள். இங்கே உண்மையான உறவு தாயாக இருந்தாலும், தந்தையின் திட்டத்தை நிறைவேற்றும் போது உண்மையான உறவு இங்கே பலபடுத்தப்படுகின்றது.
அன்னை மரியா உலகின் மாந்தர் அனைவருக்கும் தாயானாள். சிலுவையின் அடியில் அன்று முதல் இன்றுவரை விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாகத் திகழ்கின்றாள். அனைத்து மாந்தரின் துயர் துடைப்பதால் உண்மையான உறவின் உச்சக்கட்டமாக திகழ்கின்றாள். இதன் கருப்பொருளை உணர்த்துவது தான் இந்த உறவின் உயிருள்ள வார்த்தை! கடவுளின் திருவுளத்தை நிறைவுற்றுபவராக மரியாள் விளங்குகின்றாள் என்பதை மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம். அன்னை மரியின் காட்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே உலக மாந்தரின் துயர் துடைக்க அன்னை மரியாளும் அனேக புனிதர்களின் மறைசாட்சிகளும் இன்று வரை இயேசு கூறும் உண்மையான உறவின் உச்சக்கட்ட நிகழ்வுகளாகும்.
அன்பு இயேசுவே! நான் உமது தந்தையின் திருவுளத்தை நிறைவு செய்யும் வரம் தாரும். ஆமென்.