இன்றைய நற்செய்தி:

மாற்கு 3:22-30

தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் மன்னிப்புப்பெறார்.

அருள்மொழி :

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். மாற்கு 3:2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அற்புதங்களையும், புதுமைகளையும் கண்டு மறைநூல் அறிஞர்கள் பழித்துரைக்கின்றார்கள். இவர்களை நோக்கி இறைமகன் அனைத்தும் தூய ஆவியாரின் செயல்களே. அவராலே தான் இந்த உலகம் இயங்குகிறது. அவுரின் அறச்செயல்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஏற்க மனமில்லாத அந்த வஞ்சகர்களை பார்த்து தூய ஆவியை பழித்துரைப்பவர்கள் என்றுமே மன்னிப்பு அடையமாட்டார்கள்.. வெகுசினத்தோடு கூறுகின்றார். அதே வேளை மக்கள் பாவங்கள்,அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தையும் மன்னிப்பார் என்பதை இங்கே இறைமகன் புடமிட்டுகாட்டுகின்றார்.

நண்பர்களே! இன்றும் என்றும் இந்த உலகம் இயங்குவது தூயஆவியால் தான். எனவே நாம் துணிவோடு தூயவரின் ஆற்றலைப் பெற்று திக்கெட்டும் சென்று நற்செய்தியை பறைசாற்றுவோம். இறைவன் மக்கள் மத்தியில் தான் வாழ்கின்றார் என்பதை சுட்டிகாட்டி மூவொரு இறைவனின் திருவிளையாடல்களை உலகறிய செய்வோம். தந்தை படைத்தவர், சுதன் மீட்டவர், தூயஆவி-பராமரித்து வருபவர். மூவொரு இறைவனும் ஒரேகடவுள் என்ற மனநிலையை மனிதரிடையே கொண்டுச் செல்வோம். சதா இயங்கி கொண்டிருக்கும் ஆவியாரின் ஆற்றலில் வரம் வருவோம்.

சுயஆய்வு:
  1. தூயஆவியார் எத்தகைய வல்லமையுடையவர் என்பதை உணர்ந்துள்ளேனா?
  2. என்றென்றும் தீராத பாவம் ஏது என்பதை உணர்கின்றேனா?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! என்றென்றும் இயங்கும் தூயவரால் நான் இயங்கிட வரம் தாரும்.ஆமென்