,

இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:14-29

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்

அருள்மொழி :

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். மாற்கு 1:15

வார்ததை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி நீங்கள் அடிமையாக வாழ்ந்தகாலம் போய்விட்டது. நல்லகாலம் பிறந்துவிட்டது. நீங்கள் உங்கள் பழைய மனநிலையை விட்டு மனம் மாற நல்ல செய்தியை உங்களுக்கு அளிக்கின்றோம். இதனை நம்பி என் பின்னே வாருங்கள். உங்களுக்கு மகழ்ச்சி தரும் நற்செய்தியை அளிக்கின்றேன் என்று வீரமுழக்கம் இடுகின்றார். அன்று பிணியுற்றோர், ஊனமுற்றோர், அடிமைபடுத்தப்பட்டோர், சிறைப்பட்டோர் இவர்கள் அனைவருக்கும் நல்ல காலம் வந்து விட்டது. இனி உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். உமது மீட்பிற்காகவே மண்ணகம் இறங்கி வந்தேன் என்கின்றார் இயேசு.

நண்பர்களே! இன்றும் அனேகர் பல துயரங்களுடனும் சாதி சமய மொழி போன்றவற்றால் புறக்கணிக்கப்பட்டு புறந்தள்ளுப்பட்டு இருப்பவர்களை நாடி செல்வோம். மனம் மாறிட நாம் கருவிகளாகவோம். இறைத்திட்டம் நிறைவேற நம்மையே எந்த துன்பம் வந்தாலும் இறை அன்போடு பணியாற்றி மண்ணக மாந்தார் நல்வாழ்வு வாழ வழி செய்வோம். இன்றும் என்றும் வாறாத தேவன் நம்மோடிருப்பதால் எதற்கும் அஞ்சாமல் இறைபணியாற்றிட இறையருளை வேண்டி இறைமகன் பாதம் சரணடைவோம் .

சுயஆய்வு :
  1. மனம் மாறி நற்செய்தியை நம்புகிறேனா?
  2. காலம் நிறைவேறிவிட்டது என்பதின் கருப்பொருளை உணர்ந்துள்ளேனா?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நற்செய்தியின் பொருட்டு நான் நிலையான செயல்பாட்டில் ஈடுபட வரம் தாரும். ஆமென்.