பன்னிருவரை நியமித்தார்
அருள்மொழி :தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; 015. அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். மாற்கு 3:14,15
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு, பன்னிரு சீடர்களை தம்முடன் பணியாற்ற தேர்வு செய்கின்றார். நற்செய்தி பணி உலகம் இயங்கும் வரை பறை சாற்றவும் உலகம் முடியும் வரை நான் உங்களோடிருப்பேன். முப்பணி ஆற்ற உங்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றேன். பேய்களை ஓட்டவும் பிணிகளை போக்கவும், சிறைப்பட்டோரை விடுவிக்கவும் உங்களுக்கு எல்லாவிதமான ஆற்றலையும் அதிகாரத்தையும் வழங்குகின்றார். அவர்கள் வழி 72 சீடர்கள் புனித பவுலடிகளார் இன்ற வரை பறை சாற்றிக் கொண்டிருக்கும் புனிதர்கள், மறைசாட்சிகள், வரிசையில் துறவறசபையினர் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் அதிகாரம் கொடுக்கின்றார். இதன் வழி நாம் இயேசுவின் கட்டளைகளை ஏற்று சமுதாய மாற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதே இறைமகனின் ஆவல். சாதி, சமயம், இனம், மொழி கடந்து பணி ஆற்ற சரித்தரத்தில் ஒரு சமாரிய பெண், கானானேய பெண், நல்ல சமாரியன், நூற்றுவர் தலைவன் போன்றோகளின் பாதை பின்பற்றி தோமா, பிரான்சிஸ் சவேரியார், அருளானந்தர், அந்தோணியார், அன்னை தெரெசா அவர்களை போல் நாமும் விழைந்திடுவோம். திருமுழுக்கு பெற்ற அனைவருமே இயேசுவின் சீடர்கள்.
சுயஆய்வு :அன்பு இயேசுவே! உம் அழைப்பை ஏற்று பணியாற்றும் ஆற்றலை எனக்கு தாரும். ஆமென்.