இறைமகன் நீரே
அருள்மொழி :தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று கத்தின. மாற்கு 3:11
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு பலரை குணமாக்கினார். பேய்கள் ஓடின. இதைகண்ட மக்கள் கூட்டம் அவரை ◌தாட நெருங்கினார்கள். பேய்கள் அவரை காணும் போதே அவர் முன் மண்டியிட்டு விழுந்து "தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று குரல் கொடுத்தன. அத்தகைய எழுச்சியை இறைமகன் அன்றும் இன்றும் ஏற்படுத்துகின்றார். காணாமல் விசுவசிப்போர் பேறு பெற்றோர் என்று தோமா வாயிலாக முன்னறிவிப்பு செய்தவர்கள்; நாம் தான் என்பதை உணர்ந்திடுவோம். அவர் ஆற்றிய பணிகள் எக்காலத்திற்கும் உயிரோட்டம் உள்ளவைகளாக நம்மிடையே வலம் வருகின்றது. இவற்றை தூயஆவியின் ஆற்றலோடு உணர்ந்திடுவோம். இறைபிரசன்னத்தில் நாளும் வளர்ந்திடுவோம். இன்று உலாவரும் சாத்தான்களை ஆவியின் வல்லமையால் விரட்டுவோம். இயேசுவின் இறையரசை மண்ணில் மலர்ந்திட அனைவரும் ஒன்றிணைவோம். இன்றும் என்றும் மாறாத தேவனின் புகழை போற்றுவோம். இறைமகன் நீரே என்று திக்கெட்டும் அறச் செயல்களால் பறைசாற்றுவோம். இறைமகன் விட்டுச் சென்றபணிகள் மலைபோல் குவிந்துள்ளன. அந்த பணிகளை அடுத்தவர் நலனில் கடந்துச் சென்ற ஆற்றிடுவோம்
சுயஆய்வு :அன்பு இயேசுவே! நீரே இறைமகன் என்ற வார்த்தைகள் என்றென்றும் என் நாவு ஒலித்திட வரம் தாரும். ஆமென்.