கை சூம்பியவர் குணம் அடைதல்
அருள்மொழி :அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. மாற்கு 3:5
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு, மீண்டும் ஓய்வுநாளிள் கசூம்பிய கை உடையவனை குணப்படுத்துகின்றார். இந்த வேளையில் பரிசேயரின் மனநிலை எத்தகையது என்பதை தன் கேள்விகளால் படம் பிடித்துக் காட்டுகின்றார். குணப்படுத்துவது நல்லதா என்ற கேள்விக்கு அவர்கள் பேசாதிருந்ததை கண்டு ஒருவன் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் போது ஓய்வுநாளை முன்னிருத்தி கல் நெஞ்சக் கொண்டவர்கள் என்பதை இந்த உலகிற்கு எடுத்துயம்புகின்றார். அன்பர்களே நன்மை செய்வதற்கு எந்த நாளும் நல்ல நாளே என்பதை அறிந்து நாம் வாழும் மனிதர்களிடையே நல்லதை செய்யுங்கள். இதையே நமக்கு இந்த புதுமை வழியாக உணர்த்துகின்றார். நாம் இறைவார்த்தைகளை படித்து அசைபோட்டு புதிய சமுதாயத்தை உருவாக்கிட நம்மையே புடமிட்டு பார்பபோம். அறவழியில் வாழ நமக்கு இன்றைய வாசகம் அழைப்பு விடுக்கின்றது. ஊற்பூம் இன்றும் என்றும் மாறாத இறைமகன் நம்மோடு பயணிக்க நமது இதயங்களை அறங்களால் நிறைவு செய்யும்போது இறைமகனின் ஆலயமாக மாறும் என்பதை உள்ளத்தில் தாங்கிடுவோம். .
சுயஆய்வு:அன்பு இயேசுவே! நான் என்றும் உமது சீடராய் வாழ்ந்திட வரம் தாரும்.ஆமென்.