இன்றைய நற்செய்தி:

மாற்கு 2:23-28

ஓய்வு நாள்.

அருள்மொழி :

மேலும் அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. மாற்கு 2:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பரிசேயர்களின் கண் முடித்தனமான கேள்விக்கு விவேகமான பதிலை அளிக்கின்றார். ஓய்வுநாள் என்பது மனிதஇனமாக படைக்கப்பட்டவர்கள் வாரத்தில் 6 நாட்கள் கஎன உழைப்பை மேற்கொண்டு தங்கள் குடும்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் 7வது நாள் ஓய்வுநாள் இறைவனோடு உறவாடவும் இறைபுகழ்ச்சிகள் பாடவும், தம்மை படைத்த கடவுயோடும் உடன் புறப்புக்கள், நண்பர்கள், உற்றார், உறவுகள் அதனைத் தாண்டி ஏழைஎளியோர்களுக்கு நற்நசய்தி அறிவித்து அவர்களும் அவர்களது தேவைகளை பெற்றிடவும் ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது என்பதை உணராத பரிசேயர் பலவிதமான எதிர்மறைகளை வினாக்களை தொடுக்கின்றனர். எனவே தான் அன்பர்களே இறைமகன் விவேகமான பதிலை முன் வைக்கின்றார். ஓய்வு நாள் என்பது மனிதர்களுக்காக தான் உண்டாக்கப்பட்டது. ஓய்வு நாளுக்காக மனிதன் உண்டாக்கப்பட்டது அன்று என்பதை நாமும் உணர்ந்தவர்களாய் ஓய்வுநாளை பயனுள்ள வகையில் வறியோருக்கு வாழ்வு வழங்கும் வகையில் ஓய்வுநாளை கடைபிடிக்க முயல்வோம். இறையரசு இந்த மண்ணகம் காண உழைப்போம். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இறைமகனின் வார்த்தைகள் நமது செவிகளில் என்றென்றும் ஒலித்திட வரம் கேட்போம் ..

சுயஆய்வு:
  1. ஓய்வுநாள் எதற்கு என்பதை உணர்கின்றேனா?
  2. ஓய்வுநாளின் மகத்துவத்தை உணர்கின்றேனா?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் ஓய்வு நாளை பயனுள்ள வகையில் கடைபிடிக்க எனக்கு வரம் தாரும். ஆமென்.