உடனிருப்பு
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. மாற்கு 2:18-22
இன்றைய நற்செய்தியில் இயேசு நோன்பை பற்றி சிலர் இயேசுவிடம் கேட்கின்றனர். உம் சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை என்று. இயேசு உடனே தன் உடனிருப்பை இங்கே நிலைநாட்டுன்றார். காரணம் இறைமகன் இவ்வுலகில் பாடுகள் பலபட்டு ஒரு நாள் இறந்து மீண்டும் உயிர்த்து இவர்களை விட்டு ஒருநாள் விண்ணகம் செல்ல வேண்டும். அப்போது உடனிருப்பை தங்களோடு தக்கவைத்துக் கொள்ள சீடர்கள் மட்டுமல்ல நாமும் நோன்பிருந்து தகுந்த ஆயத்தநிலை அடையும்போது இயேசுவின் உடனிருப்பை அப்போது சுவைக்க முடியும். எனவே தான் இப்போது நான் அவர்களோடு இருக்கின்றேன். இந்த நோன்பு தேவையில்லை என்று இங்கே சுட்டிக்காட்டுகின்றார். அன்பர்களே! நாமும் நம்மோடு எந்நாளும் இருப்பேன் என்று கூறிய இறைமகனை நமது உள்ளத்திலும், இல்லத்திலும் நாளும் சுவைத்திட உணர்ந்திட நாமும் இறைவார்த்தை வழியாக நம்மோடு பேசுகின்ற இறைவனை போற்றி புகழ்ந்து தகுந்த ஆயத்தமுறையில் திருப்பலி பங்கேற்று, அருளடையாளங்கள் முறையே பெற்று, ஆன்ம உணவாக இறைமகனின் உடலை புசித்து குருதியை பருகி வாழும் போது இறைபிரசன்னம் (உடனிருப்பை) உணர்ந்திடுவோம்! வாழ்வை வளப்படுத்துவோம்.
அன்பு இயேசுவே! நான் உம் உடனிருத்தலை உணர்ந்து வாழும் வரம் தாரும்.ஆமென்.