இன்றைய நற்செய்தி

யோவான் 1:35-42

நீ கேபா எனப்படுவாய்

அருள்மொழி :

பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். யோவான் 1:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் யோவான் சீமோனை அழைத்து வந்தார். இறைமகன் அனைத்தும் உணர்ந்தவராய் யோவானின் மகனாகிய சீமோனே இனி "கேபா" எனப்படுவாய். "கேபா" என்றால் பாறை என்பது பொருள்! "நீ பாறையாய் இருக்கின்றாய். இந்த பாறையின் மீது என் திருச்சபையை கட்டுவேன்" என்பதை அன்றே உணர்த்துகின்றார். இந்த பாறை கத்தோலிக்க திருச்சபையின் அடிதளமாகும். இந்த பாறையின் மீது கட்டபட்ட திருச்சபை எந்த காற்றும், புயலும் அசைக்கமுடியாது என்பதின் நோக்கமாக தான் அன்றே சீமோனை "கேபா" என்று குறிப்பிடுகின்றார். சுயநல போக்கினால் உருவானதே பிற பிரிந்து போன சபைகள் . 15ஆம் நூற்றாண்டு வரை பல சவால்களை சந்தித்த திருச்சபை மார்ட்டீன் லூத்தரின் சுயநலம் திருச்சபையை சிதறடிக்கச் செய்தது. நண்பர்களே பேதுருவின் தலைமை பொறுப்பை அன்று இயேசு உருவாக்கினார். இன்று வரை கத்தோலிக்க திருச்சபை ரோமாபுரியில் திருதந்தையின் கீழ் இயங்குவது தூய ஆவியின் தூண்டுதலால் தான்! இத்தகைய திருச்சபை என்றும் நிலைத்து இறைமாந்தரை ஒன்று இணைக்க நாம் ஒவ்வொருவரும் ஒரு "கேபா" வாக வாழ இறையருளை வேண்டி ஊன்றி கத்தோலிக்க திருச்சபையை காத்திடுவோம். உலகளாவிய நம் பணி சிறக்க இறையருள் வேண்டுவோம்!

சுயஆய்வு:

  1. இனி நீ கேபா எனப்படுவாய் என்பதின் பொருளென்ன?
  2. "பாறை" என்பது என்னவென்று அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமத பாறையாகிய திருச்சபையில் என்றும் நான் ஒரு அங்கமாக வாழ வரம் தாரும். ஆமென்..