இன்றைய நற்செய்தி:

யோவான் 3:22-30

விண்ணிலிருந்து அருளப்பட்டவர்

அருள்மொழி:

யோவான் அவர்களைப் பார்த்து, "விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது." யோவான் 3:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் மக்களிடம் "விண்ணிலிருந்து அருளப்பட்ட மெசியா இவர் தான்! என்று இயேசுவை முன்னறிவிக்கவே நான் வந்தேன். நான் நீரினால் திருமுழுக்கு கொடுக்கின்றேன். எனக்கு பின் வருபவரோ நெருப்பினால் திருமுழுக்கு கொடுப்பார் என்று அறிவிப்பு செய்த மெசியா இவரே! இவரது மிதியடியைக் கூட தொடுவதற்கு நான் அருகதையற்றவன் " என்று இறைமகனின் வரவை நல் ஆசானாய் அறிவிக்கின்றார். இந்த நிகழ்வு விண்ணிலிருக்கும் தந்தையாம் கடவுளின் சித்தம்தான். இந்த மண்ணக மாந்தர் பெறும் அருளடையாளம். எனவே அன்பர்களே நடந்தவை, நடப்பவை இனி நடப்பப்போகின்ற அனைத்து அறப்பணிகளிலும் இறைவன் உலகில் மக்கள் மத்தியில் வாழ்கின்றார் என்பதின் உச்ச கட்டமே இறைவார்த்தைகள்! நாளும் உயிரேட்டம் பெறுகின்றது. இதன் வழி நாம் வாழ்வோமாகில் இறையரசு இந்த மண்ணகம் காணும்! மாந்தர் அனைவரும் சமத்துவம் காண்பார். இறைமகனை நாளும் சுவைப்பர் என்பதை மனதில் கொண்டு நிலையற்ற இவ்வுலக வாழ்வை நிலையான வாழ்வாக்கிட இறைத்திட்டத்தை நாளும் செவிமடுப்போம். செயல் வடிவம் கொடுப்போம்.

சுயஆய்வு :
  1. விண்ணிலிருந்து அருளப்பட்டது என்ன என்று அறிகின்றேனா?
  2. எதையும் பெறறு கொள்ளமுடியாது என்பதை என்னவென்று உணர்கின்றேனா?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! விண்ணலிருந்து அருளப்படும் கொடைகளைப் பெறு வாழ வரம் தாரும் . ஆமென்