இன்றைய அருள்வாக்கு:

லூக்கா 5:12-16

"நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக!"

அருள்மொழி :

இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. லூக்கா 5:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாரை குணப்படுத்துகின்றார். இயேசு வருவதை கேள்வியுற்ற அந்த தொழுநோயாளி "இயேசு விரும்பினால் என் நோய் குணமாகும் "என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவரது காலில் விழுகின்றான். காரணம் அவன் எண்ணற்ற பாவங்களை செய்திருந்தான். "அவர் என் பாவங்களை மன்னித்து நான் குணம் பெறும் என்று சொன்னாலே நான் முற்றிலும் குணம் அடைவேன் "என்று நம்பியிருந்ததை உணர்ந்த இயேசு "விரும்புகிறேன் நோய் நீங்குக" என்று சொல்லி குணப்படுத்துகின்றார். அன்றும் நமது குற்றங்குறைகளுக்காக மனம் வருந்தி இனி இத்தகைய பாவம் செய்ய மாட்டேன் என்ற கொள்கையோடு இறைமகனிடம் கேட்போமாகில் கண்டிப்பாக நாம் விரும்புவது நடக்கும் என்பதை மனதில் பதித்து வாழ்வோம். அடுத்தவரின் நலனுக்காய் நம்மையே அர்ப்பணிப்போம். இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து வாழும் பேற்றினை அடைவோம்.

சுயஆய்வு :
  1. "நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக!" என்பதின் பொருளை உணர்கின்றேனா?
  2. இந்த நம்பிக்கை எத்தகையது என்பதை உணர்ந்துள்ளேனா?
இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நான் என் குற்றங்களை உணர்ந்து உம விருப்பத்திற்கேற்ப வாழ வரம் தாரும். ஆமென்.