இயேசுவின் அதிகாரம்
அருள்மொழி :எனவே அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார். மத்தேயு 21:27
வார்த்தை வாழ்வாக
இன்றைய நற்செய்தி இயேசுவின் போதனைகளை கேட்டு தலைமை குருக்களும் மூப்பர்களும் அவரை அணுகி நீங்கள் எந்த அதிகாரத்தால் இதைச் செய்கின்றீர் என்று கேட்க இயேசு திருமுழுக்கு யோவானுக்கு அளிக்கும் அதிகாரத்தை முன் வைக்கின்றார். ஆனால் உண்மையை சொல்லமுடியாமல் எங்களுக்கு தெரியாது என்று சொன்னதால், இறைமகனும் நானும் உங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று முற்றுப் புள்ளி வைக்கின்றார். இறைமகனின் வருகையையும், பணியையும் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவு அவர்களது ஆட்சியும் அதிகாரமும் இருந்தது. எனவே தான் பொறமையோடு நமக்கு எதிராக வந்தவர் யார் என்று அறிந்து கொள்ள தான் இயேசுவை சோதிக்க முன் வந்தனர். இறைபணி ஆற்றும் நமக்கும் சோதனைகள் வரும் அதனை சாதனைகளாக மாற்ற இறைசித்தம் நமக்கு தேவை.
சுயஆய்வு:அன்பு இயேசுவே! உமது அதிகாரத்திற்க்குள் வாழும் வரம் தாரும். ஆமென்