இன்றைய நற்செய்தி

மாற்கு 6:45-52

"துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்"

அருள்மொழி :

ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார். மாற்கு 6:50

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் இயேசு நான்காம் சாமவேளையில் தம் சீடர்களின் படகை நோக்க கடல் மீது நடந்து வருகின்றார். சீடர்கள் "பேய்" என்று பயந்துபோனார்கள். அப்பொழுது இறைமகன் "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்ற வார்த்தைகள் எக்காலத்திற்கும், எல்லாமக்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் மகா சக்கியாக திகமும் வரிகளாகும். "அஞ்சாதீர்கள் எதற்கும் அஞ்சாதீர்கள் "என்ற நமக்கு ஆற்றலை தருகின்றார். எந்த வேளையிலும், என்ன சோதனைகள் வந்தாலும் "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றும் உம்மோடு என்று ஆறுதலான ஆற்றலை தருகின்றார். எனவே அன்பர்களே எந்த வித சோதனைகளையும் சாதனைகளாக்கும் ஆற்றல் இறைவார்த்கக்கு உண்டு என்பதை உணர்ந்திடுவோம் இறைவார்த்தைகள் நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் வாழ்கின்ற வரிவிலும் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கட்டும். இறைமகன் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்துகின்றார் என்ற சிந்தனை ஒவ்வொரு நொடியும் நம்மை ஆட்டகொள்கிறது என்பதை மனதில் பதிவு செய்யுங்கள் . அன்பர்களே எத்தகைய உற்சாகமுள்ள வரிகள் நம்மை வழி நடத்தும் என்று சிரமேற்கொள்போம்.

சுயஆய்வு:
  1. "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்பதன் பொருள் என்ன?
  2. "அஞ்சாதீர்கள் நான் என்றும் உம்மோடு " என்பதின் கருப்பொருளை அறிகிறேனா?
இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்ற உம் வார்த்தைகள் என் செவிகளில் என்றென்னும் ஒலித்திடும் வரம் தாரும். ஆமென்.