பரிவுக் கொண்டார்
அருள்மொழி :அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மாற்கு 6:34
வார்த்தை வாழ்வாக
இன்றைய நற்செய்தியில் இயேசு எந்த மக்களின் துயர் துடைக்க தரையிறங்கினாரோ அம்மக்கள் இறைமகனை கண்டதும் பெருந்திரளாக ஓடிவந்ததை கண்டு அவர்கள் மீது பரிவுக் கொண்டார். ஆயனில்லாத ஆடுகளை போல் அவர்கள் எப்படியோ தங்கள் வாழ்வை நகர்த்தும் நிலை. ஒருங்கிணைத்து செல்ல அன்று ஆயர் இல்லை. எனவே தான் இயேசு நல்லாயனாக இங்கே நிற்கின்றார். அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றை இங்கே போதிக்கின்றார். எப்படி வாழவேண்டும் அன்பு, நீதி,நேர்மை, பகிர்வு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் உங்களில் காணப்படவேண்டும். சமத்துவ சமுதாயம் கண்டிட இறைமகன் இங்கே உணர்த்துகின்றார். அவரது போதனைகள், உவமைகள், புதுமைகள் உலகம் இயங்கும் வரை நடைபெறும் உன்னதமான அறச்செயல்களாகும். இவை யாவும் நம்போன்ற இறைமாந்தரின் வழியாகத் தான் இறைமகன் நிறைவேற்றி வருகின்றார். இறை ஏவுதல்கள் பெற்ற மானிடர் ஆற்றும் பணி என்றுமே இயங்கும். உலகம் இயங்கும்வரை துணையாளர் நம்மை இயக்குகின்றார். "அஞ்சாதீர்கள் துணையாளரை உமக்கு அனுப்புவேன் "என்ற இறைமகன் வார்த்தைகள் தம் இரண்டாம் வருகை மட்டும் முன்னிருத்தும் உயிருள்ள வார்த்தைகள் எள்பதை உணர்ந்திடுங்கள்
சுயஆய்வு:அன்பு இயேசுவே! உம் பணிநிறைவாக ஆற்றிட என் மீது பரிவு இரக்கம் தாரும். ஆமென்.