இன்றைய நற்செய்தி:

மாற்கு 1:1-11

என்னைவிட வலிமை மிக்கவர் வருகிறார்

அருள்மொழி :

அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. மாற்கு 1:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் வரவை முன் வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். என்னைவிட வலிமைமிக்க ஒருவர் உனக்குபின் வருகின்றார். அவரை வரவேற்க காடுமுரடான நெஞ்சம் கொண்டவர்கள் சமநிலைக்கு வர வேண்டுமென்ற ஏசாயவின் கூற்றுப்படி யோவான் இங்கே தன்னை தாழ்த்தி இறைமைந்தனை இந்த உலகிற்கு மனிதவடிவம் எடுத்து வருகின்ற தெய்வகுழந்தை இவரே. இவரது மிதியடியைகூட தொடுவதற்கு தகுதியற்றவன் நான் என்ற யோவானின் பணிந்த பேச்சு முக்காலத்திற்கும் எதிரொலிக்கும் உயிருள்ள நாளங்களாகும்.
அன்பர்களே! யோவான் பற்றிய கபிரியேலின் வார்த்தை செக்கரியாவுக்கு வழங்கப்பட்டது. எப்படிஎனில் கிறிஸ்து வருகின்றார் என்ற உன்னதமான சுபமங்கள செய்தியை உலக மாந்தர்கள் அறியும் வண்ணம் பிறந்தவரே திருமுழுக்கு யோவான். இவர் முற்றிலும் எலிசபெத்தின் கருவறையில் மரியாவின் சந்திப்பு இவையனைத்து தூய ஆவியாரின் ஆற்றலால் நிகழ்ந்தவையே! ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் பேறுபெற்றதெப்படி? என்று வரிகள் எக்காலத்திற்கும் மரியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நற்சான்றுகளாகும். திருமுழுக்கு யோவானின் வலிமைமிகு வார்த்தைகள் அவரது மிதியடியை கூட தொடுவதற்கு தகுதியற்றவன் என்ற உயிருள்ள பணவான வாழ்த்துக்கள் இறைமகன் என்றென்றும் மூவுலகையும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது என்ற கபிரியேலின் வார்த்தைகள் உயிரோட்டம் பெறுகின்றது.

சுயஆய்வு:
  1. என்னை விட வலிமை மிக்கவர்யார் என்பதை உணர்கின்றேனா?
  2. அவரது மிதியடிகளை கூட தொடதகுதியற்றவன் என்ற வரிகள் உணர்த்தும் செய்தி யாது?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் திருமுழுக்கு யோவானை போன்று பணிந்து வாழும் வரம் தாரும். ஆமென்