கண்டார்கள்;விழுந்து குழந்தையை வணங்கினார்கள்.
அருள்மொழி :வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். மத்தேயு 2:11
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் ஞானிகள் வருகை. இறைமைந்தனின் திருக்காட்சியை கண்டு நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கிளார்கள். இவ்வுலகத்தின் பாவச்சூழலை சுட்டிக்காட்ட பிளவுபட்ட நெஞ்சங்களை , நொறுங்குண்டவர்களின் உள்ளங்களுக்கு வலுவூட்டும் உதயதீபமாக ஒளிர்ந்த அந்த குழந்தையை கண்டு ஞானிகள் பாக்கியம் பெற்றவர்களானார்கள். அந்த திருக்காட்சியைத் தான் நாம் இன்று நிறைவு கூர்கின்றோம். ஞானிகள் பெற்றக் கொண்ட அந்த பேராற்றலை நாமும் பெற்றுக் கொள்ள நம் இதயங்களும் பெற்ற திக்கெட்டும் சென்ற இயேசுவின் மதீப்பிடுகளை இந்த உலகில் நிலைநாட்டிட இன்றைய திருக்காட்சிவிழா நம்மை மெருகூட்ட அழைக்கின்றது. நமத உள்ளங்கள் இறைமைந்தனின் ஆலயமாக மாறிட நம் சொல், செயல், அனைத்தும் மழலைஇயேசுக்கு உரியகுடிலாக மாறிட நம்மையே உரசி பார்த்து தகுந்த தயாரிப்பில் வரவேற்போம்.
சுயஆய்வு:அன்பு இயேசுவே! என் உள்ளம் உன் ஆலயமாக மாறிட என் சிந்தனை- சொல்-செயல் உமதாக மாறிட வரம் தாரும் . ஆமென்